69 episodes

Voice of Yean

Yean Oli Yean

    • News

Voice of Yean

    கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை_(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

    கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை_(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

    கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
    (கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)



     தமிழாக்கம்: மு.சிவலிங்கம்




    பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்
    1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை
    தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. இதன் கையெழுத்துப் பிரதி, அச்சிடப்படுவதற்காக, பிப்ரவரி புரட்சிக்கு[2] ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டனுக்குப் பயணித்தது. முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குறைந்தது பன்னிரண்டு பதிப்புகளில் ஜெர்மன் மொழியில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் முதன்முதலாக 1850-இல் லண்டன் நகரத்துச் சிவப்புக் குடியரசுவாதி (Red Republican)[3] பத்திரிக்கையில் வெளியானது. இந்த மொழிப்பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மக்ஃபர்லேன் (Helen Macfarlane). 1871-இல், அமெரிக்காவில் குறைந்தது மூன்று வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு முதன்முதலில், 1848-ஆம் ஆண்டு ஜூன் எழுச்சிக்குச்[4] சிறிது காலத்துக்கு முன்பாகப் பாரிசில் வெளியானது, அண்மையில் நியூயார்க் நகரத்து சோஷலிஸ்டு (Le Socialiste)[5] பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதலில் ஜெர்மன் மொழியில் வெளிவந்த சிறிது காலத்

    • 3 hrs 23 min
    1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தோழர். விடுதலை ராஜேந்திரன்

    1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தோழர். விடுதலை ராஜேந்திரன்

    22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.

    1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத் தில் இராஜாஜி எனும் பார்ப்பனர் இராஜகோபாலாச் சாரியாரை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் அது. முதலில் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தையே ஏற்க மாட்டோம் என்று ‘வீரம்’ பேசிய அன்றைய காங்கிரஸ் கட்சி, பிறகு பிரிட்டிஷ் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. பெரியாரின் ‘குடிஅரசு’ இதை ‘சரணாகதி மந்திரி சபை’ என்று விமர்சித்தது. இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அப்போது ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்போது இராஜகோபாலாச்சாரி வேறு எந்த மாநில காங்கிரஸ் அமைச்சரவையும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் இந்தித் திணிப்பு. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1938 பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உத்தரவிட்டார்.

    1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் ‘குடிஅரசில்’ ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார். 1930ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். மறைமலை அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்களும் இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தே இ

    • 10 min
    மார்க்சியப் பெரியாரியம் - தோழர் வே. ஆனைமுத்துவின் முன்னோக்கு

    மார்க்சியப் பெரியாரியம் - தோழர் வே. ஆனைமுத்துவின் முன்னோக்கு

    மார்க்சியத்திற்கு இசைந்த கொள்கையே பெரியாரியல் என்பதை நிறுவியதில் தோழர் வே. ஆனைமுத்துவின் பங்களிப்பு

    பெரியார் சிந்தனைகளை - பெரியார் கொள்கைகளை - பெரியாரியலை தமிழ்ச் சமுதாயத்தில் நிலைக்கச் செய்வதைத் தன் வாழ்நாள் பணியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காகவே உழைப்பது, எவ்வளவு இன்னல் வரினும் ஏற்பது என்ற பாதையில் பயணித்தவர் தோழர் வே. ஆனைமுத்து.

    பற்பல ஏடுகளில் பல்லாயிரக்கணக்கானப் பக்கங்களில் பரவி, விரவிக் கிடந்த பெரியாரின் எழுத்துகளை, உரைகளைப் பொறுக்கித் தேர்ந்தெடுத்து, பகுத்துத் தொகுத்தளித்ததோடு அல்லாமல், எந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காகக் கூறப் பட்ட கருத்துகள் அவை என விளக்கமளிப்பது என்பதோடு நில்லாமல் காலத்திற்கு ஏற்ப பெரியாரியலை செழுமையாக்குவது என்பதையும் தம் தோள் மேல் போட்டுப் பாடாற்றியவர் தோழர் வே.ஆனைமுத்து.

    “கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு

    நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்

    தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?

    ..........

    மக்கள் தொகுதி எக்குறை யாலே

    மிக்க துன்பம் மேவு கின்றதோ

    அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனை

    சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.

    ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்

    ஏகுற வெனினை ஈன்றே தீரும்!”

    என்று புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எடுத்துக்காட்டியது போல பிரித்தானிய அரசினுடைய அரவணைப்புடன் கோலோச்சிக் கொண்டிருந்த பார்ப்பன வல்லாதிக்கத்தினால் வெகுமக்க ளுக்குக் கல்வி பயிலும் உரிமை மறுக்கப்பட் டிருந்தது; அரசு வேலை வாய்ப்பு பெறும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. உரிமை மறுப்புகளால் அமுக்கப்பட்டுக் கிடந்த சென்னை மாகாணப் பார்ப்பனரல்லாத மக்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்பி நிமிரச் செய்த உரிமை மீட்பராக எழுந்த மாமனிதர் பெரியார் ஈ.வெ.இரா.

    • 14 min
    மோடியின்  ‘புதிய’ இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும் இஸ்லாமிய மக்கள்

    மோடியின்  ‘புதிய’ இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும் இஸ்லாமிய மக்கள்

    கடந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் மீதான  ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் தாக்குதல்களும் வன்முறைகளும் எண்ணற்றவை; அம்மக்களின் துயரங்களோ சொல்லில் அடங்காதவை. “இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என காவி பயங்கரவாதிகள் வெளிப்படையாக மதவெறியைக் கக்கி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில் மோடியின்  ‘புதிய’ இந்தியாவில் தொடங்கிய இந்த இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் தற்போதைய ‘பாரத்’தில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.

    இசுலாமியர்கள் மீதான சங்கப் பரிவாரக் கும்பலின் வன்முறைகளும், வெறுப்புப் பிரச்சாரங்களும் அந்த சமயத்துடன் மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை. மாறாக, அவை மக்களின் உணர்வு நிலையிலும் இந்துக்கள், இசுலாமியர்களுக்கு இடையிலான உறவு நிலையிலும் நிரந்தப் பிளவை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில், சங்கப் பரிவாரக் கும்பலும் கலவரங்களுக்குப் பின்னர், இசுலாமியர்களை மனிதர்களாகவே நடத்தக் கூடாது என்று வெறுப்பைத் தொடர்ந்து உமிழ்ந்துவருகின்றன. திட்டமிட்டு அவர்களை ஒடுக்கி வருகின்றன.

    இந்தக் கட்டுரை, ஹரியானாவின் நூஹ் மாவட்டக் கலவரம், 2019 டெல்லி கலவரம் மற்றும் ஜார்க்கண்ட்டின் மூன்று மாவட்ட இராமநவமி கலவரங்கள் என இசுலாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்ட பகுதிகளில், இக்கலவரங்களுக்குப் பிறகு இசுலாமியர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும். நாடாளுமன்றத்தில் அண்மை கால சம்பவங்கள் நாட்டின் மாண்புமிக்க இடத்திலேயே இசுலாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

    யோகியின் பயங்கரவாத ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசம், பா.ஜ.க.வின் க

    • 14 min
    பெரியாருக்கு எதிரான அடுக்கடுக்கான திரிபுகள்

    பெரியாருக்கு எதிரான அடுக்கடுக்கான திரிபுகள்

    ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு நெய்வேலியில் இருந்து வெளி வந்த ‘தலித்’ எனும் ஏட்டின் முதல் இதழில் (1997) இளையபெருமாள் அவர்கள் சொன்னதாக வந்திருந்த ஒரு செய்தி குறித்து தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதி, விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ என்ற நூலில் (1998) 21வது அத்தியாயமாக ‘பெரியாரும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரையின் அடிக்குறிப்பாக எழுதப்பட்டுள்ள ஒரு செய்தி:

    “பின்னாளில் ‘தொண்டு’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த வீராசாமியைப் பெரியார் 1952இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி (மாயவரம் இரட்டை உறுப்பினர் தொகுதி என்பதே சரி) ரிசர்வு தொகுதியிலிருந்து வெற்றி பெறச் செய்ததுடன் பெரியார் 1952இல் உருவாக்கிய அறக்கட்டளை உறுப்பினராகவும் ஆக்கினார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் காரணமாக பெரியாரிடமிருந்து பிரிந்த ‘தொண்டு’ வீராசாமியை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியதற்காக கழகத்திலிருந்து பெரியார் வெளியேற்றினார் என்ற அபத்தமான அருவருக்கத்தக்க குற்றச்சாட்டை பொறுப்புணர்வு மிக்க தலித் தலைவர் இளைய பெருமாள் கூறியுள்ளது (தலித் எண்:1. நெய்வேலி 1997) வருந்தத்தக்கது - எஸ்.வி.ஆர்” என்பதே அவ்வடிக்குறிப்பு.

    • 11 min
    EWS இடஒதுக்கீடு வரலாறு : எம்ஜிஆர் பொருளாதார வரையறையை நீக்கியது ஏன்?

    EWS இடஒதுக்கீடு வரலாறு : எம்ஜிஆர் பொருளாதார வரையறையை நீக்கியது ஏன்?

    இடஒதுக்கீட்டில் பொருளாதாரம் என்ற அம்சத்தை புகுத்துவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 1970களின் இறுதியிலேயே பொருளாதார அளவுகோல் முயற்சிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு என்னவாக இருந்தது?

    சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை முன்னேற்ற சிறப்புச் சலுகைகளை அளிப்பதை இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 15(4), 16(4) அனுமதிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வந்தன.

    மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு, மத்திய அரசும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை இந்த பிரிவு அளிக்கும் அனுமதியின் பேரிலேயே அளிக்கிறது.

    இந்தப் பிரிவு பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்குவதை ஏற்கவில்லை. ஆகவே, இந்திய அரசியலமைப்பின் பிரிவு இதற்காகத் திருத்தப்பட்டு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையும் அனுமதிக்கும் வகையில் மாற்றப்பட்டது. அதன்படியே இப்போது மத்திய அரசின் பணிகளிலும் சில மாநிலங்களிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    • 9 min

Top Podcasts In News

L’Heure du Monde
Le Monde
Xadrez Verbal
Central 3 Podcasts
The Global Story
BBC World Service
The News Agents
Global
The Intelligence from The Economist
The Economist
Expresso da Manhã
Paulo Baldaia