அருந்ததி ரோய் எழுதிய Mother Mary Comes To Me நூலை மையமாக வைத்து, தாய்–மகள் உறவின் சிக்கல்களையும், அன்பும் வன்முறையும் ஒரே நேரத்தில் கலந்து நிற்கும் அந்த முரண்பட்ட வெளிகளையும் ஜீவியும் ஜேகேயும் இந்த உரையாடலில் ஆராய்கிறார்கள்.
பொதுவாழ்வில் பெண்ணியவாதியாகப் போற்றப்பட்டவராகவும், வீட்டிற்குள் குழந்தைகளை வன்முறைக்குள்ளாக்கிய தாயாகவும் இருந்த மேரி ரோயைத் தாயாகக் கொண்ட மகளாக, அந்த முரண்பாட்டை அருந்ததி ரோய் எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்பதே இந்த நூலின் மையம். இந்திய அடிப்படைவாத சமூகச் சூழலில், குறிப்பாகச் சிறுபான்மை சமூகங்களில், பெண்கள்மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகள், குடும்பமும் சமூகமும் ஒரு பெண்ணின் மன உலகை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும் இந்த உரையாடல் தொட்டுச் செல்கிறது.
“அவளே என் புயலும்; அவளே என் அடைக்கலமும்” என்ற அந்தச் சிக்கலான உறவை, அருந்ததி ரோய் தனது நேர்மையான மொழிநடையால் எவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பதைக் கேட்கும் ஒரு பயணம் இது.
Amplify Bookstore
Penguine Bookstore
www.padalay.com
Information
- Show
- FrequencyUpdated Weekly
- Published15 January 2026 at 10:51 am UTC
- Length1hr 5min
- RatingClean
