45 épisodes

Reading out aloud, Tamil stories for kids. When we read to kids, they develop interest in reading, extend their attention span and stretch
their imagination. Let our children explore the treasure.

Kathai Solli Kathai Solli

    • Famille

Reading out aloud, Tamil stories for kids. When we read to kids, they develop interest in reading, extend their attention span and stretch
their imagination. Let our children explore the treasure.

    ஆயிரம் காசுகள் - 45வது கதை

    ஆயிரம் காசுகள் - 45வது கதை

    எல்லாரும் தான் தெய்வத்திடம் வேண்டுவாங்க. முனுமுனுமுனுன்னு நிறைய காசு வேணும், பணம் வேணும், நகை வேணும் இன்னும் என்னென்னல்லாமோ வேண்டுவாங்க. நஸ்ருதீன் ஹோட்ஜாவும் வேண்டுவார். ஆனா அவர் கொஞ்சம் வித்தியாசமா வேண்டுவார். கொஞ்சம் சத்தம் போட்டு வேண்டுவார். “தெய்வமே! எனக்கு ஆயிரம் தங்கக்காசுகள் வேணும். ஆயிரம் காசு. அதுக்கும் குறையா ஒரு காசு நீ கம்மியா குடுத்தாலும் எனக்கு வேண்டாம். ஆயிரம்னா ஆயிரம் தான்.” அப்படின்னு தினமும் வேண்டுவார்.

    இது இவரோட பக்கத்து வீட்டுக்காரருக்கும் கேட்கும். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர் நஸ்ருதீன் ஹோட்ஜாவ சும்மா சீண்டிப்பாத்து விளையாடலாம்னு நினைச்சாரு. ஒரு பையில எண்ணி சரியா தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தங்கக் காசுகளை போட்டு வைச்சுக்கிட்டாரு. அதாவது ஆயிரத்துக்கு ஒரு காசு கம்மி. நஸ்ருதீன் ஹோட்ஜா தெய்வத்திடம் காசு வேணும்னு வேண்டும்போது, அவர் வீட்டுக்குள்ள அந்தப் பையை ஜன்னல் வழியா தூக்கிப் போட்டாரு.

    நஸ்ருதீன் ஹோட்ஜா தன் பக்கத்துல வந்து விழுந்த அந்தப் பையைப் பார்த்ததும் “ஆஹா! தெய்வம் நம்ம வேண்டுதலை நிறைவேத்திருச்சு.”ன்னு சந்தோஷமா அந்தப் பைக்குள்ளப் பார்த்தாரு. அட! பூராந் தங்கக் காசு. அப்படியே அங்கயே கொட்டி ஒன்னுவிடாம எண்ணிப் பாத்தாரு. தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது. திரும்பவும் எண்ணிப் பாத்தாரு. திரும்பத் திரும்ப எண்ணிப் பாத்தாரு. இருந்ததென்னவோ தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தான்.

    “என்னடா, நம்ம தெய்வத்திடம் ஆயிரம் காசு கேட்டோம். ஆனா இதுல ஒன்னு குறையா இருக்கே. சரி பரவால்ல. இவ்ளோ குடுத்த தெய்வம் இன்னொன்னு குடுக்காமையா போகும்.”ன்னு நினைச்சுட்டே, குடுத்த தெய்வத்துக்கு நன்றிய சொல்லிட்டு, பைய மடில முடிஞ்சாரு.

    இதையெல்லாம் வெள

    • 4 min
    ஊரெல்லாம் டாக்டர்ஸ் - 44வது கதை

    ஊரெல்லாம் டாக்டர்ஸ் - 44வது கதை

    ஒரு நாள் ராஜாவும் மந்திரியும் பேசிகிட்டு இருந்தாங்க. ராஜா மந்திரியிடம் நம்ம ராஜ்ஜியத்தில நிறைய மக்கள் பலவகையான தொழில் செய்றாங்க. எந்த தொழில் மிக பிரபலமாக இருக்கிறதுன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. டாக்டரா? விவசாயியா? தொழிலாளியா? Government வேலையா? இத நீங்க கண்டுபிடிச்சி சொல்லுங்க ன்னார் . மந்திரியும் சரி ன்னார். சில நாள் கழிச்சு மந்திரி ராஜாகிட்ட வந்து நம்ம ராஜ்ஜியத்தில டாக்டர்ஸ் தான் அதிகமா இருக்காங்க என்றார். அத நான் எப்படி நம்புறதுன்னு கேட்டறாரு ராஜா. நீங்க வேணும்ன்னா மாறுவேடம் அணிஞ்சு என் கூட ஊர் சுற்றி பாருங்க உங்களுக்கே நான் சொல்றது தான் சரின்னு தெரியும் என்றார் மந்திரி. ராஜாவும் சரின்னு ஒத்துக்கிட்டார். மாறுவேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் மறுநாள் காலையில ஊரு சுத்தி பார்க்க கிளம்புனார். கையில் ஒரு bandage கட்டிக்க கொண்டு வந்தார் மந்திரி. என்ன ஆச்சு? என்று கேட்டார் ராஜா. மனைவி வீட்டில் இல்லை. நான் சமையல் செய்தப்போ கையை சுட்டுக் கொண்டேன். என்று சொன்னார் மந்திரி. இரண்டு பேரும் ஊருக்குள் சென்றனர். ஒரு சாதாரண நபர் போல் வேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் போனாங்க. நகரத்துல பலபேருக்கு மந்திரியை தெரியும். தெரிஞ்சவங்க மந்திரியை நலம் விசாரிச்சாங்க. எல்லோரும் கையில் ஏற்பட்ட காயத்திற்கு அட்வைஸ் கூறினாங்க. தேங்காய் எண்ணெய் தடவ சொன்னார் ஒருத்தர். பச்சிலை தடவ சொன்னார் இன்னொருத்தர். கத்தாழைச் சாற்றை காயம்பட்ட இடத்தில் தடவினால் சீக்கிரம் சரியாகிவிடும்ன்னு சொன்னார் மற்றொருத்தர். இப்படி எல்லோரும் மந்திரிக்கு மருந்துக்களை அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருப்பதை ராஜா பார்த்தார். சிரிச்சிக்கிட்டே மந்திரியின் புத்திசாலித்தனத்தை எண்ணி பாராட்டினார். ஊரெல்லாம் டாக்டர்ஸ் தான்னு ராஜா ஒத்துக்

    • 2 min
    பெரிய்ய்யப் பரிசு - 43வது கதை

    பெரிய்ய்யப் பரிசு - 43வது கதை

    ஒரு நாள், விவசாயி ஒருத்தர் தன் ஏர் கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு தன் வயலுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போ ஒரு வேலியோரம் எதேர்ச்சையாகப் பார்வை பட, ஏதோ ஒன்று பெரிதாகக் கண்ணில் பட்டது.

    “இவ்ளோ பெருசா!” நம்ப முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தார். நன்றாக உருண்டு திரண்ட ஒரு பெரிய பரங்கிக்காய் அது. “இவ்ளோ பெரிய பரங்கிக்காய் நான் இதுவரை பார்த்ததில்லை” என்று ஆச்சரியப்பட்டார். இந்த அதிசயப் பரங்கிக்காயை ராஜாவிற்குப் பரிசளிக்கலாம் என்று தலையில் தூக்கிக்கொண்டு ராஜாவின் மாளிகைக்கு நடந்தார்.

    பெரிய்ய்யப் பரங்கிக்காயைப் பார்த்ததும் ராஜாவுக்குப் பரவசம். “உலகிலேயே இதுதான் மிகப்பெரியப் பரங்கிக்காயாக இருக்க வேண்டும்” என்று ஆச்சரியமாகக் கூறினார் ராஜா. விவசாயியின் அன்பளிப்பைப் பெற்று மகிழ்ந்து, அவருக்குப் பொற்காசுகள் பரிசளித்து அனுப்பிவைத்தார்.

    விவசாயியின் அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. அதைக் கேள்விப்பட்டார் ஒரு பணக்கார வியாபாரி. “பரங்கிக்காய்க்கேப் பொற்காசுகளா! அப்போ ராஜாவுக்கு என்னிடமுள்ள இந்த அழகிய முத்துமாலையைப் பரிசளித்தால் அவர் எனக்கு என்னென்ன பரிசுகள் தருவார். வண்டி நிறைய வைரமும் ரத்தினமும் தருவாரோ?”என்ற ஆசையில் ராஜாவின் மாளிகைக்குச் சென்றார்.

    அந்த முத்து மாலையை ராஜாவுக்குப் பரிசளித்தார். “ஆ! என்ன ஒரு அழகான முத்துமாலை” என்று ராஜாவும் அந்த முத்துமாலையைக் கண்டு மகிழ்ந்தார். “இந்த அழகான முத்துமாலைக்கு ஈடாக நான் உங்களுக்கு என்ன கொடுக்க முடியும்? இவ்வளவு விலை உயர்ந்த பரிசை எனக்களித்த உங்களிடம் ஏற்கனவே பொன்னும் பொருளும் ஏராளமாக இருக்கவேண்டும். அதனால் வேறொரு அரிய, பெரிய, அதிசயப் பொருளை உங்களுக்குப் பரிசளிக்கிறே

    • 1m
    சூரியனும் காற்றும் - 42வது கதை

    சூரியனும் காற்றும் - 42வது கதை

    ஒரு இலையுதிர் காலத்துல சூரியனுக்கும் காற்றுக்கும் சண்டை வந்துச்சாம். நான் உன்னை விட வலிமையானவன்னு காற்று சூரியனைப் பார்த்து சொல்லிச்சாம். ம்ஹும்  இல்லவே இல்லன்னு சூரியன் மென்மையா சொல்லிச்சாம். அப்ப அந்த பக்கமா போர்வை போர்த்திக்கிட்டு பயணி ஒருத்தர் நடந்து போய்ட்டு இருந்தத சூரியனும்  காற்றும் பார்த்தாங்க. நம்ம ரெண்டு பேர்ல யார் பயணிக்கிட்ட இருந்து போர்வைய பிரிக்கிறாங்களோ அவங்கதான் வலிமையானவங்க அப்படின்னு சூரியன் சொல்லிச்சாம்.  காற்றும் ஐ இது நல்லா இருக்கேன்னு ஒத்துக்குச்சாம். முதல்ல பயணிக்கிட்ட இருந்து போர்வைய நான் தான் எடுப்பேன்ன்னு சொல்லிச்ச்சு  காற்று. ஓகே நீயே பண்ணிக்கோன்னு சொல்லுச்சி சூரியன்.  காற்று வீச ஆரம்பிச்சது. பயணி தன்னுடைய போர்வைய நல்லா சுத்திக்கிட்டாரு.  காற்று இன்னும் பலமா வீசுச்சாம். பயணி தன்னுடைய போர்வைய இறுக்கிப்  பிடிச்சிக்கிட்டாரு.  காற்று கடினமா விசுச்சாம். பயணி தன்னுடைய போர்வைய இன்னும் கெட்டியா பிடிச்சிகிட்டாரு.  காற்று வேகமா வீச வீச பயணி தன்  போர்வைய நல்லா விடாப்படியா பிடிச்சிக்கிட்டாரு. வேற வழி இல்லாம  காற்று தன்  தோல்விய ஒத்துக்கிச்சாம். இப்போ நான் ட்ரை பண்றேன்னு சொன்ன சூரியன் பயணி போற திசையை அன்போட பார்த்தது. பயணிக்கு வேர்க்க ஆரம்பிச்சது. இறுக்கமா போர்த்திட்டு இருந்த போர்வைய கொஞ்சம் தளர்வாக்கினாரு. சூரியன் பயணியின் திசையைப்  பார்த்து அதிகமா சிரிச்சசாம். சூரியனோட வெம்மைய பயணி உணர்ந்து போர்வைய பிரிச்சாரு. காற்று தன்னைவிட  சூரியன் தான் வலிமையானவர்ன்னு ஒத்துக்கிச்சாம்.  சூரியன் புன்னகையோடு ஓகே சொல்லிச்சாம். பலத்தை விட திறமைதான் பெஸ்ட். 

    • 2 min
    லட்சம் பறவைகள் - 41வது கதை

    லட்சம் பறவைகள் - 41வது கதை

    லட்சம் பறவைகள்

    ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும். நாட்டு மக்கள் அவர்கிட்ட தினமும் புதுசு புதுசா கதை சொல்லிகிட்டே இருப்பாங்க. ராஜா அவங்ககிட்ட அப்புறம் என்னாச்சு? கதை அவ்ளோதானா? வேற கதை சொல்லுங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாரு! யாராலையும்  மன்னரின்  கதைப்பசிக்கு தீனி போட முடியல. அரசருக்கு நாட்டுல  கதை சொல்றவங்க குறைஞ்சிட்டாங்களோன்னு எண்ணம் வந்துருச்சி! அதனால ஒரு அறிவிப்பு வெளியிட்டார். யார் வேணுமுனாலும் ராஜாகிட்ட வந்து  கதை சொல்லலாம். ராஜா எப்போ போதும் , கதை சொல்றது நிறுத்துன்னு சொல்றாரோ அதுவரைக்கும் அவங்க விடாம  கதை சொல்லணும். அப்படி  கதை சொல்றவங்களுக்கு 1000 தங்க நாணயங்களை வெகுமதி தர்றதா அறிவிச்சார் ராஜா. பல பேர் மன்னர்க்கிட்ட  கதை சொன்னாங்க ஆனா யார்கிட்டயும் ராஜா  கதை சொல்றது போதும்ன்னு சொல்லவேயில்லை. இன்னும் சொல்லு !  அடுத்தது என்ன? ன்னு கேட்டுகிட்டே இருந்தாரு !  கதை சொல்றவங்களோட முயற்சி தோல்வியிலதான் முடிஞ்சது. ஒரு நாள் காலையில ஒரு விவசாயி  ராஜாகிட்ட வந்து மன்னர் தன்னை நிறுத்துன்னு சொல்றவரைக்கும் நான் ஒரு  கதை சொல்வேன்னு சொன்னார். மன்னரும் சரின்னு சொல்லிட்டு  கதை கேட்க உட்கார்ந்தார். விவசாயி  கதை சொல்ல ஆரம்பிச்சார். ஒரு காலத்துல ஒரு பெரிய வேட்டைக்காரன் இருந்தான். அவன்கிட்ட ஒரு பெரிய வலை இருந்தது. அவன் ஒரு பெரிய காட்டுக்குப் போயி அந்த வலையை விரிச்சான். மதியத்துலயே லட்சக்கணக்கான பறவைகள் அவன் விரிச்ச வலையில சிக்கிருச்சி. ஆனா அதிர்ஷ்டவசமா அந்த வலையில ஒரு சின்ன துளை இருந்தது. சிறகடிச்சு முதல் பறவை தப்பிச்சிருச்சு. அப்புறம் என்னாச்சு ?  கேட்டார் ராஜா.  சிறகடிச்சு இரண்டாவது பறவை தப்பிச்சிருச்சி ! பிறகு ? ன்னு கேட்டார் அரசர்.  சிறகடிச்சு ம

    • 3 min
    எலி பொம்மை - 40வது கதை

    எலி பொம்மை - 40வது கதை

    எலி பொம்மை 

    ஊர் தலைவரின் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மக்கள் எல்லோரும் விருந்துக்கு வந்திருந்தாங்க. அப்போ வீட்டுத் திண்னையில் எலி ஒண்ணு போறத பார்த்தாரு தலைவர். உடனே அவருக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோணுச்சு. அங்க இருந்த மக்கள்கிட்ட யார் தத்ரூபமா ஒரு எலி பொம்மைய செய்றாங்களோ அவங்களுக்கு 1000 ரூபாய் சன்மானம்ன்னு அறிவிச்சாரு. வேடிக்கையான யோசனையா இருந்ததால மக்கள் எல்லோரும் ஆர்வமாகிட்டாங்க. அதுல ஒருத்தர் தலைவர்கிட்ட எலி பொம்மையை நல்லா செஞ்சாங்கன்னு யார் தீர்ப்பு சொல்லுவா ? ன்னு கேட்டாரு. அதுக்கு தலைவர் எங்க வீட்டுல பூனை இருக்கு. அந்த பூனை எந்த எலி பொம்மைய எடுக்குதோ அந்த பொம்மைய செஞ்சவருக்குத்தான் பரிசு அப்படின்னு அறிவிச்சாரு. பூனைய விட எலிய யாருக்கு நல்லா தெரியும்ன்னு மக்களும் ஒத்துக்கிட்டாங்க. எல்லோரும் ஆவலா பங்கெடுத்துக்கிட்டாங்க.  ஒருத்தர் எலிய குண்டா பண்ணினார். இன்னொருத்தர் எலியின் வால் அளவ பெருசா  பண்ணினார். மற்றொருத்தர் எலியோட வண்ணம் மற்றும் உடலமைப்பை அப்படியே செஞ்சார். தலைவர் சொன்ன நாள்ல அவரவர் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சாங்க. அதுல ராஜீவ் என்கிற சிறுவனும் தான் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சான். அவனது பொம்மை பார்க்கிறதுக்கு எலி மாதிரியே தெரியல. மக்களும் இது எலிதானா? போட்டி என்னனு தெரியுமா ? அப்படின்னு அவனை கிண்டல் பண்ணினாங்க. அவன் அமைதியா இருந்தான். தலைவர்  தன்  வீட்டு பூனைய எலி பொம்மைங்க கிட்ட விடுறதுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்த பொம்மைகள பார்த்தாரு. அவரும் ராஜீவ் கிட்ட வந்து தம்பி உன்னுடைய பொம்மை எலி மாதிரியே தெரியலயே. வெற்றி பெறும் வாய்ப்பும் உனக்கு இல்ல. போட்டியில கலந்துக்காத அப்படின்னு சொன்னாரு. அவன் ஒத்துக்கல. பூனையை

    • 3 min

Classement des podcasts dans Famille

Lingokids: Stories for Kids —Learn life lessons and laugh!
Lingokids
Disney Frozen: Forces of Nature
Disney Publishing, ABC Audio
Contes Étoilés de l'Islam
Nawel
Happy Mum Happy Baby
Giovanna Fletcher
L’Espace du Couple
Les Podcasteurs
عالم القصص
Rising Giants Network