The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

    VOR 19 STD.

    நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

    செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன். திமுக-வின் பி டீம்' என எடப்பாடி பதிலடி அட்டாக். இதில் செங்கோட்டையன் எடுத்து வைக்கும் அடுத்த நான்கு அடிகள், எடப்பாடிக்கு பலமான லாக்காக இருக்கும் என்கிறார்கள். சுதாரித்தவர், சில நகர்வுகள் மூலம் எச்சரிக்கும் எடப்பாடி என்கிறார்கள். எல்லாவற்றையும், ஹாப்பியாக வேடிக்கை பார்க்கும் மு.க ஸ்டாலின். மீண்டும், உச்சத்துக்கு சென்ற, அதிமுக-வின் 'உட்கட்சி வார்!'

    20 Min.
  2. செங்கோட்டையன் நீக்கம், சளைக்காத Sasikala, EPS-ன் புது ஆட்டம்! | Elangovan Explains

    VOR 1 TAG

    செங்கோட்டையன் நீக்கம், சளைக்காத Sasikala, EPS-ன் புது ஆட்டம்! | Elangovan Explains

    கட்சிக்குள் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என சில முயற்சிகளை முன்னெடுக்கும் வி.கே சசிகலா. அந்த வகையில் எடப்பாடி டீமிடம், சசிகலாவின் தூதுவர்கள் டீல் பேசி வருகின்றனர். மூன்று டிமாண்டுகளை முன்வைக்கின்றனர். 'இதை ஏற்காவிடில், எங்களுக்கு பெரிதாக இழப்பு இல்லை ஆனால் எடப்பாடிக்கு நிறைய இழப்புகள் உண்டு முக்கியமாக தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பறிபோகும்' என சில புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர். சசிகலாவை மட்டும் ஆதரித்து மற்றவர்களை புறக்கணிக்கலாமா? என எடப்பாடி டீம் உள்ளேயே, சிலர் ஆலோசனை தருகின்றனர். இப்போதைக்கு டிசம்பர் வரை பொறுத்து இருக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையே செங்கோட்டையனை, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் எடப்பாடி.

    21 Min.
  3. நள்ளிரவு டீல், 'பனையூர்' சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains

    VOR 2 TAGEN

    நள்ளிரவு டீல், 'பனையூர்' சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை. இங்கு மரியாதை செலுத்தி சில வாக்குறுதிகளை கொடுத்தனர் மு.க ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள். இதற்கு பின்னணியில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் கணக்குகள் உள்ளன. அதே நேரத்தில், இங்கே வைத்து எடப்பாடிக்கு எதிராக புதிய சபதத்தை போட்டுள்ள மூவர். ஓபிஎஸ், டிடிவி-யுடன் ஓபனாகவே கைகோர்த்த செங்கோட்டையன். திடீரென எதிர் முகாமில் இணைந்து, சபதம் போட்டதற்கு பின்னணியில், பனையூரில் இருந்து வந்திருக்கும் பாசிட்டிவ் சிக்னல் உள்ளது என்கிறார்கள்.

    18 Min.
  4. Karur மக்களிடம் Vijay கொடுத்த வாக்குறுதி! Mamallapuram மினிட்ஸ்! | Elangovan Explains

    VOR 5 TAGEN

    Karur மக்களிடம் Vijay கொடுத்த வாக்குறுதி! Mamallapuram மினிட்ஸ்! | Elangovan Explains

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, 30 நாட்களுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்தார் விஜய்.பாதிக்கப்பட்டவர்களை, அவர்களிடத்துக்கே நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தன்னுடைய இடத்தில் அழைத்து வந்து ஆறுதல் கொடுப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே நேரத்தில், கரூர் மக்களிடம் சில வாக்குறுதிகளை விஜய் கொடுத்துள்ளார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்க மகள் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கைகளும் வலுக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் செல்வப்பெருந்தகை, தொழிலாளர்கள் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பெ.சண்முகம், தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா விவகாரத்தில் தொல்.திருமாவளவன் என மு.க ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளனர். இந்த கேள்விகள், கூட்டணிக்குள் நெருக்கடியை உருவாக்கியுள்ளதா? என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?

    21 Min.
  5. BJP-க்காக, RSS கொடுத்த பட்டியல், மிரண்ட EPS? | Elangovan Explains

    25. OKT.

    BJP-க்காக, RSS கொடுத்த பட்டியல், மிரண்ட EPS? | Elangovan Explains

    NDA கூட்டணியை வலுவாக்க பாஜக தீவிரம். அந்த வகையில் சமீபத்தில் அன்புமணியை சந்தித்து டீல் பேசியுள்ளனர். 'அவர் 50 தொகுதிகள் வரை கேட்க, இவர்களோ 27 தொகுதிகள் வரை ஓகே' என பேச, இப்படியாக முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதில் அன்புமணி கேட்ட ஒன்று, பாஜகவை யோசிக்க வைத்துள்ளது. பாஜக வைத்த ஒரு டிமாண்ட், அன்புமணியை யோசிக்க வைத்துள்ளது. இன்னொரு பக்கம், பாஜக வெல்லும் தொகுதிகளாக, ஆர்.எஸ்.எஸ் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது. அந்த பட்டியலை பார்த்து எடப்பாடி ஷாக். 'என் ஏரியாவையே டார்கெட் பன்றீங்களே' என கொதிக்கும் அவரின் ஆதரவாளர்கள்.

    15 Min.
  6. மந்திரிகளின் Cold war, ஆக்‌ஷன் ரூட்டில் Stalin? | Elangovan Explains

    24. OKT.

    மந்திரிகளின் Cold war, ஆக்‌ஷன் ரூட்டில் Stalin? | Elangovan Explains

    நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் 'எடப்பாடி Vs உதயநிதி' என களத்தை கட்டமைக்கும் போது, அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என கணக்கிடுகிறார் மு க ஸ்டாலின் ஆனால் அவர் கனவுக்கு குடைச்சல்கள் கொடுக்கும் வகையில், உட்கட்சியில் நிறைய பஞ்சாயத்துகள். முக்கியமாக மந்திரிகளுக்கு இடையே தீவிரமடையும் கோல்டுவார். இதை சரி செய்யாமல் ஆட்சியை தக்க வைக்க இயலாது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

    21 Min.
  7. Silent Mode-ல் Vijay, EPS-ன் 3 வெடி, Stalin ஷாக்? | Elangovan Explains

    23. OKT.

    Silent Mode-ல் Vijay, EPS-ன் 3 வெடி, Stalin ஷாக்? | Elangovan Explains

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், 'திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது' என விமர்சிக்கிறார் எடப்பாடி. முக்கியமாக, டெல்டா மாவட்டங்களுக்கு பயணித்து திமுக அரசை அட்டாக் செய்துள்ளார். பின்னணியில், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' எனும் அரசியல் கணக்கும் உள்ளது. அங்கு மொத்தம் 27 தொகுதிகளில், ஐந்தில் மட்டுமே அதிமுக வெற்றி. இதை மூன்று மடங்காக உயர்த்த, மூன்று வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் எடப்பாடி. இன்னொரு பக்கம் இந்த பயணத்தின் மூலம், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு ஷாக் கொடுத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள்.

    19 Min.
  8. Bihar Election: Amit shah-க்கு PK சர்ப்ரைஸ், Stalin Alert! | Elangovan Explains

    22. OKT.

    Bihar Election: Amit shah-க்கு PK சர்ப்ரைஸ், Stalin Alert! | Elangovan Explains

    தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் தொடர் மழை. இதில் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், பீகார் அரசியல் புயல் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அங்கு NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு முடிந்துள்ளது. ராகுல், தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு, செக் வைக்கக் கூடிய வகையில் யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களிலிருந்து வேட்பாளர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு என இறங்கியாடும் நிதிஷ்குமார், அமித் ஷா கூட்டணி. இந்தப் பக்கம், இந்தியா கூட்டணியில் முழுமை அடையாத தொகுதி பங்கீடு, போட்டி வேட்பாளர்கள் களமிறக்குதல் என தேஜஸ்வி யாதவ் ராகுல் இடையே முட்டல், மோதல் தீவிரம். 'Friendly Fight' என வர்ணித்தாலும் NDA-க்கு சாதகமான சூழலை இவர்களே உருவாக்குகிறார்கள் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் மூவ். பாஜக-வுக்கு ப்ளஸ் அதுவே மகா கூட்டணிக்கு ஷாக்காக மாறுகிறது என்கிறார்கள். பீகார் தேர்தலை உற்று நோக்கும் தமிழ்நாடு. எகிறும் பரபரப்பு.

    23 Min.

Info

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Mehr von Hello Vikatan

Das gefällt dir vielleicht auch