5 episodes

dinasuvadu voice podcast

Dinasuvadu Voice Dinasuvadu Voice

    • News

dinasuvadu voice podcast

    இன்றைய முக்கிய செய்திகள் (03-02-2024)

    இன்றைய முக்கிய செய்திகள் (03-02-2024)

    இன்றைய முக்கிய செய்திகள் (03-02-2024)

    • 2 min
    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் பொருத்தப்பட்ட கருவி 

    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் பொருத்தப்பட்ட கருவி 

    எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் சிறிய அளவிலான கருவியை பொருத்தி சாதனை படைத்துள்ளது. இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளி ஃபோன், கம்பியூட்டர் உள்ளிட்ட சாதனங்களை, தனது சிந்திப்பு மூலம் இயக்க முடியும். 



    இதுகுறித்து மஸ்க் தனது X வலைதள பக்கத்தில், நியூராலிங்  பொருத்தப்பட்ட முதல் நோயாளி, நல்ல முறையில் உடல்நலம் தேறி வருவதாக பதிவிட்டுள்ளார்.

    • 25 sec
    X-தளத்தில் ஆடியோ & வீடியோ கால் வசதி 

    X-தளத்தில் ஆடியோ & வீடியோ கால் வசதி 

    பயனர்களின் வசதிக்கேற்ப X தளத்தில் புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.



    அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக X தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாக இருப்பதாகவும், இந்த புதிய வசதிக்கு தொலைபேசி எண்கள் தேவையில்லை என்று எலன் மஸ்க் தெரிவித்து இருந்தார். 



    இந்த நிலையில், தற்போது ஆண்டிராய்டு பயனர்கள் X-தளத்தில்  ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி iOS பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 35 sec
    பிப்-1 முதல் மதுபான விலை உயர்கிறது..! மது பிரியர்கள் அதிர்ச்சி..!

    பிப்-1 முதல் மதுபான விலை உயர்கிறது..! மது பிரியர்கள் அதிர்ச்சி..!

    10 முதல் 20 ரூபாய் வரை பீர் உள்ளிட்ட மது வகைகளின் விலை பிப்-1 முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதுபிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  



    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்-1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.



    மதுபான ரகங்களின் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 45 sec
    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம்

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம்

    உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் விரைவில்  அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.

    இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பின், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த கூட்டத்தில், திமுக சார்பாக வாக்குசாவடிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதிமுக சார்பாக வாக்குப்பதிவு நேரத்தை சற்று குறைக்க வேண்டும் என கோரிக்கை  முன்வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    • 1 min

Top Podcasts In News

Les actus du jour - Hugo Décrypte
Hugo Décrypte
Les Grosses Têtes
RTL
L’Heure du Monde
Le Monde
Global News Podcast
BBC World Service
LEGEND
Guillaume Pley
Journal en français facile
Français Facile - RFI