118 episodios

Tamil Programs, Talk Shows, Panel Discussion, Debate,

American Tamil Radio's podcast American Tamil Media

  • Cultura y sociedad

Tamil Programs, Talk Shows, Panel Discussion, Debate,

  Arivom Arignarkalai - Eckhart Tolle

  Arivom Arignarkalai - Eckhart Tolle

  Arivom Arignarkalai - Eckhart Tolle, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida. ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் கல்விபயின்று இப்போது கனடாவின் வான்கூவர் நகரில் வசித்துவரும் எக்கார்ட் டால் அமெரிக்காவின் சிறந்த மனவளக்கலை நிபுணராகத் திகழ்ந்துவருபவர். தாமே முயன்று அகத்தாய்வுப் பயிற்சிகளாலும் தியான முறைகளாலும் (introspection and intense contemplation) ஆன்ம விழிப்பும் உலகியல் குறித்த தெளிந்த பார்வையும் பெற்றிருக்கும் டால், மனிதர்கள் அந்தந்த நொடிக்கான வாழ்வை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எழுதி, 1997இல் வெளிவந்த ’The Power of Now: A Guide to Spiritual Enlightenment’ என்ற நூலும், பொருளைத் துரத்திக்கொண்டு ஓடாமலேயே பொருள்பொதிந்த வாழ்க்கையையும் புத்துலகையும் படைக்கலாம் என்பதை விளக்கும் வகையில் அவர் எழுதி 2005இல் வெளியான ’A New Earth: Awakening to Your Life’s Purpose’ என்ற நூலும் மிகவும் புகழ்வாய்ந்தவை.

  • 14 min
  Neethi Venba: IT Ep 12

  Neethi Venba: IT Ep 12

  ATR host Thiru. Kolandavel Ramasamy about Tamil Neethi Chelvangal from Ara Nerichaaram in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள், நீதி வெண்பாலிருந்து வழங்கும் தமிழ்நீதிச் செல்வங்கள் 12 (நீதி வெண்பா) (Jan 18, 2020)

  • 10 min
  US General Election - Ep-1, Jan 2020

  US General Election - Ep-1, Jan 2020

  அமெரிக்கத் தலைவர் தேர்தல் 2020-ல் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்று கல்லூரி மாணவிகள் ஸ்ருதி சொக்கலிங்கமும் மாதவி சங்கரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி. அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் இப்போது சந்தித்து வரும் பொருளாதார, சுற்றுப்புற சூழல் மற்றும் சுகாதாரம் சார்ந்த சவால்களை பல்வேறு கோணங்களில் இவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தும், அவற்றில் இப்போது போட்டியிடும் வேட்பாளர்களின் நிலைப்பாடு என என்பதையும் விரிவாக விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் உரையாடலும் கருத்துப் பரிமாற்றமும் பங்கேற்பாளர்களின் சொந்தக்கருத்துகளே.

  • 49 min
  ATR Ilakkiya Thuligal - Ara Nerichaaram 11

  ATR Ilakkiya Thuligal - Ara Nerichaaram 11

  ATR host Thiru. Kolandavel Ramasamy about Tamil Neethi Chelvangal from Ara Nerichaaram in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள், 13ஆம் நூற்றாண்டில் முனைப்பாடியார் எனும் அறிஞர் எழுதிய அறநெறிச்சாரத்திலிருந்து வழங்கும் தமிழ்நீதிச் செல்வங்கள் 11 (Jan 11, 2020)

  • 9 min
  Dr. Martin Luther King Jr

  Dr. Martin Luther King Jr

  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் இளையர் பற்றிய இந்த நிகழ்ச்சி, கவிதைத் தொகுப்பும், சிந்தனைச் செறிவும் நிறைந்த ஒன்றாக அமைந்தது. இதில் பங்கு பெற்றோர், முனைவர் அமிர்தகணேசன் (அகன்), முனைவர் சொர்ணம் சங்கர், திருமதி ஜெயா மாறன், திருமதி வெ.மைதிலி, திரு. கொழந்தவேல் இராமசாமி, திரு. அண்ணாதுரை தங்கவேல், திரு. சண்முகம் பெரியசாமி.

  • 24 min
  Vivekananthar

  Vivekananthar

  அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "விவேகானந்தர்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Vivekanandar. கொல்கத்தாவிலுள்ள சிம்லா நகரைச் சார்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரான விஸ்வநாத தத்தர் புவனேஸ்வரி தேவி இணையருக்குத் தவப்புதல்வராக, 1863ஆம் ஆண்டு, ஜனவரி 12இல் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர்.
  1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடைபெற்ற அனைத்து மத மாநாட்டில் கலந்துகொண்ட விவேகானந்தர், ”எல்லா மதங்களும் உண்மையே! எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்து மதத்தின் கொள்கை” என்ற அருமையான கருத்தை முன்வைத்தார். மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற சொற்பொழிவாளர்கள் அனைவரும் தத்தமது மதத்தைப் பற்றி மட்டுமே பேசினர். ஆனால் விவேகானந்தரோ அனைத்து மதங்களில் இருக்கும் உண்மைகளையும் மதக் காழ்ப்பின்றிப் பேசினார். அதனால் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றவரானார். பத்திரிகைகள் அவரது உரையை வெகுவாய்ப் புகழ்ந்து எழுதின. ஒரு சிறந்த பேச்சாளருக்கு இருக்கவேண்டிய வெண்கலக் குரல், மொழிவளம், கம்பீரத் தோற்றம் ஆகியவை விவேகானந்தரிடம் குடிகொண்டிருந்தமை அவரை அனைவரும் விரும்பும் பேச்சாளராக ஆக்கியதில் வியப்பேதுமில்லை.

  • 15 min

Top podcasts de Cultura y sociedad

Otros usuarios también se han suscrito a