15 min

Vivekananthar Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

    • Comentando la noticia

அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "விவேகானந்தர்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Vivekanandar. கொல்கத்தாவிலுள்ள சிம்லா நகரைச் சார்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரான விஸ்வநாத தத்தர் புவனேஸ்வரி தேவி இணையருக்குத் தவப்புதல்வராக, 1863ஆம் ஆண்டு, ஜனவரி 12இல் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர்.
1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடைபெற்ற அனைத்து மத மாநாட்டில் கலந்துகொண்ட விவேகானந்தர், ”எல்லா மதங்களும் உண்மையே! எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்து மதத்தின் கொள்கை” என்ற அருமையான கருத்தை முன்வைத்தார். மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற சொற்பொழிவாளர்கள் அனைவரும் தத்தமது மதத்தைப் பற்றி மட்டுமே பேசினர். ஆனால் விவேகானந்தரோ அனைத்து மதங்களில் இருக்கும் உண்மைகளையும் மதக் காழ்ப்பின்றிப் பேசினார். அதனால் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றவரானார். பத்திரிகைகள் அவரது உரையை வெகுவாய்ப் புகழ்ந்து எழுதின. ஒரு சிறந்த பேச்சாளருக்கு இருக்கவேண்டிய வெண்கலக் குரல், மொழிவளம், கம்பீரத் தோற்றம் ஆகியவை விவேகானந்தரிடம் குடிகொண்டிருந்தமை அவரை அனைவரும் விரும்பும் பேச்சாளராக ஆக்கியதில் வியப்பேதுமில்லை.

---

Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support