
60 episodes

Sadhguru Tamil Sadhguru Tamil
-
- Religion & Spirituality
-
-
4.3 • 7 Ratings
-
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
-
உறவுகள் சுமையா?
இங்கே உறவுச் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. "கஷ்டப்படுத்தும் இந்த உறவுகளை என்ன செய்வது?" சத்குரு அவர்களிடம், இப்படி ஒருவர் கேட்டபோது, சத்குரு கூறிய சுவாரஸ்ய பதிலை, இந்த ஆடியோ பதிவில் காணலாம்.
See omnystudio.com/listener for privacy information. -
அசைவம் சாப்பிடாதவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களா?
பொதுவாக, அசைவ உணவு வகைகள் (NonVeg) மிகவும் ருசியானது என்றும், சைவ உணவுகளை (Veg) மட்டுமே சாப்பிடுபவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை என்றும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன! சைவ உணவு பழக்கமுள்ள திரு.பாலா இதுகுறித்து தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை சத்குருவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கையில் உணவு, ருசி, ஆரோக்கியம் குறித்து நாம் கவனிக்க வேண்டியவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
See omnystudio.com/listener for privacy information. -
திருமணமான தம்பதிகள் ருத்ராட்சம் அணியலாமா?
ருத்ராட்சம் என்றாலே பிரம்மச்சாரிகளுக்கானது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. திருமணத்திற்குப் பின் ருத்ராட்சம் போன்ற ஆன்மீக வாய்ப்புகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், சிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். ருத்ராட்சம் அணிவது பற்றிய கேள்விக்கு சத்குருவின் பதில்.
See omnystudio.com/listener for privacy information. -
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பது ஏன்?
‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!’ என்று பாரதி அன்றே பாடியிருந்தாலும், பெண்களைப் பொறுத்த வரையில் தாங்கள் ஆண்களுக்கு கீழ், இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுவதாக உணர்கிறார்கள். சமூகத்தில் ஏன் இந்த நிலை? இந்நிலை மாற அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? சத்குருவின் பதில் ஆடியோவில்!
See omnystudio.com/listener for privacy information. -
ஓடும் மனதை நிறுத்துவது எப்படி? | How To Stop Mind Chatter?
மனதில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை நிறுத்த வேண்டுமென்ற ஆவல் தியானம் செய்பவர்களிடத்தில் பரவலாக இருக்கிறது. எண்ணங்கள் இல்லாத நிலையை எய்திய பின்புதான் தியானம் சாத்தியமாகும் என்ற பார்வையை மாற்றும் விதமாக சத்குருவின் இந்த உரை அமைகிறது.
See omnystudio.com/listener for privacy information. -
மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?
மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்’ என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.
See omnystudio.com/listener for privacy information.