61本のエピソード

VIsit : http://www.sumathygsmy.in/
Blank Thoughts Few thoughts from a selfless mind A Motivational Podcast by Sumathy Gnanasegar

Tamil Poems by Sumathy Gnanasegar blank thoughts for school students. Here are the best Tamil poems of all the time. This Podcast consist of the Collection of my good thoughts which will be useful from seven to seventy years age group. Hidden for the past forty years. Published now to renovate all minds.

என் பத்து வயதில் விதைத்து விளைந்த,
புதைத்து வைத்த எழுத்துத் தொகுப்புகளை இப்பொழுது உங்களுக்குத் தருகிறேன்.

Tamil Poems | Blank Thoughts Sumathy Gnanasegar

    • 教育

VIsit : http://www.sumathygsmy.in/
Blank Thoughts Few thoughts from a selfless mind A Motivational Podcast by Sumathy Gnanasegar

Tamil Poems by Sumathy Gnanasegar blank thoughts for school students. Here are the best Tamil poems of all the time. This Podcast consist of the Collection of my good thoughts which will be useful from seven to seventy years age group. Hidden for the past forty years. Published now to renovate all minds.

என் பத்து வயதில் விதைத்து விளைந்த,
புதைத்து வைத்த எழுத்துத் தொகுப்புகளை இப்பொழுது உங்களுக்குத் தருகிறேன்.

    61. முகவரியில்லா முகம் | EMPTY FACE

    61. முகவரியில்லா முகம் | EMPTY FACE

    இருள்மயமான எதிர்காலம் அவனுள்ளத்தில்

    எழுந்து வருகின்றன.

    இருமலைகளினிடையே தொங்கும் பாலம்

    அவன்பார்வையில் படுகின்றது.

    இருமுனைகளும் கட்டப்படாத ஊஞ்சலில்

    அவன்ஆடுவது அறிவில்தெரிகின்றது.

    இருப்புப்பாதை நீண்டுசென்றுஅவன்துயர்தனை

    நினைவுப் படுத்துகின்றது.

    இருகரங்களைத் தட்டியபோதும் ஓசை

    எழும்பாததை செவியறிகின்றது.

    இருண்டநிலவு குடிகொண்டுள்ள இடம்

    அவன்கண்களில் தெரிகின்றது.

    இருமுட்கள் இல்லாத கடிகாரம்அவன்

    காலத்தைக் கணிக்கின்றது.

    இருதயம்இல்லா மனிதர்கள் அவனிடம்

    ஒதுங்கிச்செல்வது புரிகின்றது.

    இருக்கையின்றி அவன்அமர முயலும்

    முட்டாள்தனம் தெரிகின்றது.

    இருகைகளையும் கட்டிக் கொண்டுஅவன்

    பூத்தொடுப்பது புரிகின்றது.

    இருண்டமனம்வேண்டாதுஇருமனம்வேண்டுவதை

    அவன்மனம் அறிகின்றது.

    வந்ததுயரை தாங்கஒன்று நொந்தவாழ்வை

    எதிர்க்க மற்றொன்று.

    தன்வயிற்றுப் பசிப்பிணிபோக்கும் போராட்டத்தில்

    வந்துபோகும் அவன்கண்ணீருக்கு

    • 1分
    60. பரலோகத்தில் பாவிகள் | SINNERS IN HEAVEN

    60. பரலோகத்தில் பாவிகள் | SINNERS IN HEAVEN

    தொப்புள்கொடி அறுக்கப்பட்டு அழும்போது

    அப்பாவிதான்!

    தொட்டிலில் வாழ்வைத் தொடங்கும்போது

    அப்பாவிதான்!

    தொடக்கக் கல்வியிலேயே தொய்ந்தபோதும் அப்பாவிதான்!

    தொடங்கிய உயர்கல்வியோடுபோராடும்போதும்

    அப்பாவிதான்!

    தொங்கித்தொங்கி வேலைதேடிய போதும்

    அப்பாவிதான்!

    தொடர்ந்து வேலைசெய்து களைத்தபோதும்

    அப்பாவிதான்!

    தொடர்ச்சியாக அமைத்த மணவாழ்விலும்

    அப்பாவிதான்!

    தொடர்வண்டியாக பிள்ளைகள் பெற்றபோதும்

    அப்பாவிதான்!

    தொற்றிப்படர்ந்த தொல்லைகளின் போதும்

    அப்பாவிதான்!

    தொய்ந்த வாழ்வைஏற்றி நிமிர்த்தியபோதும்

    அப்பாவிதான்!

    தொடுஉணர்வு இழந்த வயோதிகத்தின்போதும்

    அப்பாவிதான்!

    தொட்டாச்சிணுங்கியாக இறுதியில்வாழ்ந்தபோதும்

    அப்பாவிதான்!

    தொண்டுசெய்ய பலரிருந்தபோதும்

    அப்பாவிதான்!

    தொந்தரவு பலதந்தாலும் உள்ளுணர்வில்

    அப்பாவிதான்!

    தொடர்ந்து அப்பாவியாக வாழ்ந்தவன்எப்படபாவியாகி அங்குநிற்கிறாய்!

    • 2分
    59. விழி | EYE

    59. விழி | EYE

    அந்தரத்தில் நீர்பூத்து

    அலர்ந்தெழுந்தத் தாமரைகள்

    அந்தக் கருணைவிழிகள்!

    ஈவோர் அரிதாகிய இவ்வுலகின்கண்

    இரக்கும் கருணை அளித்து

    இல்லது அறியாது அளவிறந்து

    அன்பை அள்ளித்தரும்

    அயிரை மீன்கள்அவை!

    அந்தக் கண்களில்

    சந்திரன் குடிகொண்டுள்ளானோ?

    அவைஅளிக்கும் தண்மைஎம்

    இதயம்தனை இதப்படுத்தும்.

    கண்டவுடன் நம்கஷ்டத்தை

    அளவெடுக்கும் அந்தக்கயல்விழிகளில்

    என்னஅளவுகோலா இருக்கின்றது?

    பதப்படுத்தும் அப்பார்வைகள்தான்

    நம்மை பத்திரப்படுத்தும்.

    இலக்குகொண்டு இந்தியாவில்

    வறுமைக்கு ஒழிப்புதரும்

    அந்தவிழி ஒன்றாவது

    விழித்தெழுந்தால் விண்ணைத்தாண்டி

    நம்ஏற்றம் ஏறிச்செல்லும்!

    • 1分
    58. இனியபாத கைமலர்கள் | FLOWERS

    58. இனியபாத கைமலர்கள் | FLOWERS

    சேவல்கள் கூவிட துயிலுணர்ந்தெழுந்து

    செம்பனித் துளிகள் சிதறும்

    புலர்காலை வேளை! நுண்மையான

    புத்தம் புதுவாழ்வுக் காலையில்

    தொழுவதற்குரிய புனிதக்கமலப்

    பாதங்கள் இவை! - எனின்

    தேவை இவைகளின் சேவை!

    இவ்வெவனம் கையேந்தா திருக்க

    எளியோர்தம் இதயம்தனில் வடியும்

    குருதி யோட்டத்தை சீராக்க,

    உள்ளங் கலங்கும் கண்களின்

    நீரைத்துடைத்து மக்களை உவகையூட்ட,

    கோடானுகோடி மக்களின் கண்களிட்ட

    கோலநீரை வாரிவெளியேற்ற வந்த-இந்த

    மென்மையான மலர்க் கரங்கள்

    முனைந்து வந்து அணைக்கும்

    அன்புக் கரங்கள்! வந்துநிற்கும்

    இவர்தம் பாதங்கள்கூட பூஜைக்குரிய

    இனிய பாதக் கைமலர்கள்!

    • 1分
    57. விளங்காததில் வந்த வியப்பு | CONFUSED SURPRISE

    57. விளங்காததில் வந்த வியப்பு | CONFUSED SURPRISE

    எண்சாண் உடம்பின்

    எண்ணற்ற சினைகளையும்

    எழிலுறக் கற்பித்து,

    எகாலஜியை இனிமையாய்விளக்கி

    எம்பிரியாலஜியை எளிமையாக்கிய

    எம்ஆசானின் மூளை

    ஆயிரம்மலர்கள் மலர்ந்துமணம்வீசும்

    அற்புதசோலை.

    கரைபுரண்டோடும் நதிகளிலே

    கரைசேர்ந்த கங்கைநதி அது.

    ஓங்கி உயர்ந்த மலைகளிலே

    மாணவர்களின் கண்மலர்களை

    மலர்த்திநோக்க வைத்த

    இமயமலை இது - இங்கேயுள்ள

    விலங்கியலின் தொகுப்பு

    விஞ்ஞானிகளையும் வியக்க

    வைக்கும் பதிப்பு!

    மொத்தத்தில் இதுஒரு

    கன்னிமரா லைப்ரரி!

    • 54秒
    56. செவி | Ear

    56. செவி | Ear

    எத்தனை பிறவி யெடுத்தாலும்

    அத்தனைப் பிறவிகளிலும்

    துள்ளாத மனதையும் துள்ளச்செய்து

    சொல்லாத கதைகள் சொல்லி

    இல்லாத ஆசையைக் கிள்ளி

    இன்பத் தேனையும் வென்ற-எம்

    இனிய மழலைத் தமிழால்

    மகிமைப் பெற்ற மானிடச்

    செவிகளிலே மகத்தானதொரு

    செவி நம்செவி! - தேனெனத்

    தீந்தமிழில் பாடும்எம் பாடலின்

    ஒலிகள் பாய்ந்துசெல்லும் இச்செவிகள்

    செவிமடுத்தஎம் சிங்கார வார்த்தை

    ஜாலங்களின் மகிமையும் இனிமைபெற,

    என்றென்றும் உம்செவிகளில் எம்

    நாவின் தாளங்கள் ஜதிபாடிக்

    கொண்டே யிருக்க வாழ்த்துகிறேன்!

    கேட்டமைக்கு நன்றி கோர்க்கின்றேன்!

    • 49秒

教育のトップPodcast

英語聞き流し | Sakura English/サクラ・イングリッシュ
SAKURA English School
英語で雑談!Kevin’s English Room Podcast
ケビン (Kevin's English Room)
6 Minute English
BBC Radio
Hapa英会話 Podcast
Jun Senesac: バイリンガル 英会話 & ビジネス英語 講師
TED Talks Daily
TED
【聞くだけで覚えられる 】簡単な英語表現・ 初級 | 聞き流しのリスニイング 🍎
しゃべれる英語