17 episodes

சொல்லிலடங்கா/Solliladanga (Beyond Words) is a podcast series produced by a team of youths with a passion for Singapore Tamil literature. In a series of 10 episodes, hosts Ayilisha Manthira and Ashwinii Selvaraj discover a range of topics in Singapore Tamil literature and converse with Singapore Tamil writers, literary experts, and young creatives. The Sollil team of 9 presents to you 10 episodes, featuring 11 guests from the Singapore Tamil literary scene, every Sunday morning, at 9:10:11. This project is supported by the National Arts Council.

Solliladanga - Singapore Tamil Literary Podcast Solliladanga (சொல்லிலடங்கா)

    • Arts

சொல்லிலடங்கா/Solliladanga (Beyond Words) is a podcast series produced by a team of youths with a passion for Singapore Tamil literature. In a series of 10 episodes, hosts Ayilisha Manthira and Ashwinii Selvaraj discover a range of topics in Singapore Tamil literature and converse with Singapore Tamil writers, literary experts, and young creatives. The Sollil team of 9 presents to you 10 episodes, featuring 11 guests from the Singapore Tamil literary scene, every Sunday morning, at 9:10:11. This project is supported by the National Arts Council.

    Ep 10: Feelings, Emotions & Culture: Writing Beyond Words in Tamil Literature | பாகம் 10: தமிழெழுத்தும் எழுத்தின்பமும்: நிறைவுப் பாகம்

    Ep 10: Feelings, Emotions & Culture: Writing Beyond Words in Tamil Literature | பாகம் 10: தமிழெழுத்தும் எழுத்தின்பமும்: நிறைவுப் பாகம்

    🎤🎤🌊🤓🤓📖 THANK YOU SO MUCH FOR LISTENING TO SOLLILADANGA THUS FAR. A lot has been analysed, A lot has been said, but we are ending this series with the message that the growth and sustenance of both language and literature undeniably lie in the hands of youth. Hosts Ayilisha and Ashwinii speak with Harini V, a young bilingual poet, the former lead coordinator of the NLB Young Writers’ Circle (an interest group under the National Library Board), and a writing enthusiast who has been conducting Tamil writing workshops like Penachudar to encourage young and new writing talents. Harini reads her poem "Karuppu Vellai Saayalgalil" (Shades of Black and White) in this episode. Come, Listen, Fall in Love and start writing.

    🎤🎤🌊🤓🤓📖 இதுவரை சொல்லிலடங்கா வலையொலி தொடரை கேட்டு வந்ததற்கு மிக்க நன்றி! நிறைய ஆராய்ந்துள்ளோம், நிறைய பேசியுள்ளோம். ஆனால் இத்தொடரின் இறுதி பாகத்தில் மொழியும் இலக்கியமும் செழித்து வளர்வது இளையர்கள் கைகளில்தான் உள்ளது என்னும் செய்தியுடன் முடிக்க விரும்புகிறோம்.  நம் தொகுப்பாளர்கள் ஆயிலிஷா மற்றும் அஷ்வினி  இருமொழி கவிஞரும், தேசிய நூலக வாரியத்தின் இளம் எழுத்தாளர் வட்டத்துடைய முன்னாள் முன்னணி ஒருங்கிணைப்பாளரும், பேனாச்சுடர் போன்ற தமிழ் எழுத்துப் பட்டறைகளை நடத்தி வரும் இளம் இலக்கிய ஆர்வலரும் ஆன ஹரிணியை சந்திக்கின்றனர். மேலும் இந்த பாகத்தில் ஹரிணி தனது "கருப்பு வெள்ளை சாயல்களில்" என்னும் கவிதையையும் வாசிக்கிறார். வாருங்கள், கேளுங்கள், பரவசமடைந்து எழுதத் தொடங்குங்கள்.

    Follow us here to join the conversation: Instagram | Facebook | YouTube

    Recorded at: Decibel Studios

    Logo Design: AngelHeartWorks

    A project supported by: National Arts Council

    • 41 min
    Ep 9: Youth Involvements in Tamil Language and Literature | பாகம் 9: தமிழ் மொழி, இலக்கியம்: இளையர்களின் பங்களிப்பு

    Ep 9: Youth Involvements in Tamil Language and Literature | பாகம் 9: தமிழ் மொழி, இலக்கியம்: இளையர்களின் பங்களிப்பு

    🤓🤓🎤🎤🌊📖Can we make a future by pursuing Tamil Literature and Linguistics? In this episode, Ayilisha and Ashwini follow the lives of two interesting youths: Helen Dominic a Tamil Linguistics PhD candidate, researching on the sociocultural forces shaping varieties of Tamil in Diaspora communities,  at Georgetown University, and the enterprising 16-year-old Saranya Mushila, a Tamil enthusiast who finds interest in writing Tamil poems, short stories, and very recently, plays too, along with running a YouTube channel together with her peers that aims to make Tamil literature accessible to all. Ayilisha and Ashwini explore the trajectories of these two talents and find out what led them to take the Tamil writing and research journey.

    🤓🤓🎤🎤🌊📖தமிழ் இலக்கியமும் மொழியியலும்  பயில்வது  பிற்காலத்தில் உதவுமா? இந்தப் பாகத்தில், ஆயிலிஷா மற்றும் அஷ்வினி  இரண்டு சுவாரஸ்யமான இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையை பின்தொடர போகிறார்கள். தமிழ் மொழியியலில் முனைவர் பட்டத்திற்காக  அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஹெலன் டோமினிக்கைப் பற்றியும், புலம்பெயர் சமூகங்களில் சமூக கலாச்சார காரணிகள் எவ்வாறு தமிழ் மொழியை மாற்றுகிறது என்னும் அவரது ஆராய்ச்சி பற்றியும் அறிந்துகொள்ள போகிறோம். மேலும் தமிழின்மீது அதீத ஆர்வம் கொண்ட 16-வயது சரண்யா முஷிலாவைப் பற்றியும், அவர் கவிதைகள், சிறுகதைகள், மற்றும் நாடகங்கள் எழுதுவதற்கான தூண்டுதல், தன் நண்பர்களுடன் இணைந்து தமிழிலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முனையும் அவரது "தமிழை என் உயிர் என்பேன்" எனும் "யூட்டியூப் சேனல்"-ஐப் பற்றியும் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

    Follow us here to join the conversation: Instagram | Facebook | YouTube

    Recorded at: Decibel Studios

    Logo Design: AngelHeartWorks

    A project supported by: National Arts Council

    • 39 min
    On a break! Coming back to you on 7 Feb | ஒரு சிறு இடைவேளை - 7 பிப்ரவரி அன்று மீண்டும் சந்திப்போம்

    On a break! Coming back to you on 7 Feb | ஒரு சிறு இடைவேளை - 7 பிப்ரவரி அன்று மீண்டும் சந்திப்போம்

    The final two episodes of Solliladanga will be airing on 7th Feb and 14th Feb!🤓🤓🎤🎤🌊📖 Thank you so much for your overwhelming love and support for this series. We are taking a break tomorrow and will be back with our last two episodes in February. Meanwhile, revisit our episodes on all major streaming platforms. Keep listening, keep reflecting! (And yes that was our hosts going chipmunk saying the names of all our platforms🐿)

    சொல்லிலடங்கா வலையொலி தொடரின் இறுதி இரண்டு பாகங்கள் பிப்ரவரி 7 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய தேதிகளில் வெளிவருகின்றன!🤓🤓🎤🎤🌊📖 இந்தத் தொடருக்கு இதுவரை நீங்கள் அளித்த அளவில்லா அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. நாளை ஒரு சிறிய இடைவேளையை எடுத்துக்கொண்டு, பிப்ரவரியில் எங்கள் கடைசி இரண்டு அத்தியாயங்களுடன் உங்களை சந்திப்போம். அதுவரை, அனைத்து முக்கிய ஒலிபரப்பு தளங்களிலும் எங்கள் முந்தைய பாகங்களை  மீண்டும் கேளுங்கள். மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்! (ஆம், எங்கள் தளங்களின் பெயர்களைச் "சிப்மங்க்" குரலில் சொன்னது எங்கள் தொகுப்பாளர்களேதான்🐿)

    #சொல்லிலடங்கா #beyondwords #lasttwoepisodes #singlit #singaporetamilliterature #letstalkaboutbooks #books #solliladanga #literaryjourneybyyouth #stories #passionmadepossible #இலக்கியம் #சிங்கைத்தமிழிலக்கியம் #வரலாறு #வலையொலி #இளையர்களின்இலக்கியப்பயணம்

    Follow us here to join the conversation: Instagram | Facebook | YouTube

    Streaming here too: Spotify | Apple Podcasts | Google Podcasts

    Logo design: @angelheartworks FB | Insta

    Recorded at: Decibel Studios

    A project supported by: National Arts Council

    • 2 min
    Ep 8: Lost in words: Translation and Transcreation in Tamil literature | பாகம் 8: சொல்லுக்கு அப்பால்: தமிழிலக்கியத்தில் மொழிபெயர்ப்பும் மொழ

    Ep 8: Lost in words: Translation and Transcreation in Tamil literature | பாகம் 8: சொல்லுக்கு அப்பால்: தமிழிலக்கியத்தில் மொழிபெயர்ப்பும் மொழ

    🎤🎤🌊🤓🤓📖Translating literature is not just challenging in its own right, but translated works often open up and reveal new textual meanings that play out differently in varied cultural contexts. How important and relevant is the translation, especially for local Tamil literary works? Who is the mythical English reader we are translating for? What are the challenges translators face? In this episode, our hosts Ayilisha and Ashwinii, budding translators themselves, share their thoughts about translations and engage deeper with Kavitha Karuum, who has extensively worked in the media and translation industry, and whose translations have been featured in projects by The National Library Board, National Arts Council, Poetry Festival Singapore and Words Without Borders. Also, look out for a snippet from Singapore’s veteran translator, P. Krishnan, known for his Tamil translation of the Shakespeare play, Macbeth, when he spoke about his experiences in a documentary made by Vaasagar Vattam (Singapore) & Vallinam (Malaysia). 

    இலக்கியத்தை மொழிபெயர்ப்பது  சுலபமான ஒன்றில்லை. அப்படி மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்  மாறுபட்ட கலாச்சார சூழல்களில்  புதிய அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு மொழிபெயர்ப்பு எவ்வளவு முக்கியமானது? நாம் மொழிபெயர்க்கும் "அந்த" ஆங்கில வாசகர் யார்? மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் யாவை? இந்த பாகத்தில், எங்கள் தொகுப்பாளர்களும் வளர்ந்து வரும் மொழிப்பெயர்ப்பாளர்களுமான ஆயிலிஷா மற்றும் அஷ்வினி, மொழிபெயர்ப்பு பற்றிய தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் ஊடகம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவாகப் பணியாற்றி தேசிய நூலக வாரியம், தேசிய கலை மன்றம், சிங்கப்பூர்க் கவிதைத் திருவிழா, வர்ட்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Words Without Borders) போன்றவற்றின் வெளியீடுகளில் மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்ட கவிதா கருமுடனும்  ஆழமாக  கலந்துரையாடுகிறோம். அதுமட்டுமில்லாமல் இப்பாகத்தில், ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக கொண்டாடப்படும், சிங்கப்பூரின் மூத்த மொழிபெயர்ப்பாளர் பி. கிருஷ்ணனின் எண்ணங்களை துணுக்காக வழங்கவிருக்கிறோம் (வாசகர் வட்டம் (சிங்கப்பூர்) மற்றும் வல்லினம் (மலேசியா) ஒருங்கிணைந்து படைத்த ஆ

    • 38 min
    Ep 7: Women in Singapore Tamil Literature: Writers & Writing | பாகம் 7: சிங்கை தமிழிலக்கியத்தில் பெண்களும் பெண் எழுத்தும்

    Ep 7: Women in Singapore Tamil Literature: Writers & Writing | பாகம் 7: சிங்கை தமிழிலக்கியத்தில் பெண்களும் பெண் எழுத்தும்

    “(I write about)…. the everyday murder of women, the countless deaths they die through every humiliations and micro-aggressions, the erasure of their identities.” - Kanagalatha, Award-winning Singapore Tamil Writer

    A unique aspect of the local Tamil literature scene is that women form a significant part of the writing community. They have made their mark across different types of literary genres (i.e, poetry, short stories, etc.). However, has this effectively translated into making the woman’s voice heard in their works? Moreover, do female writings always have to be feminist in nature? What unspoken hesitations do female writers have when they write on female-oriented subjects? Hosts Ashwinii and Ayilisha have a conversation with female writer Rama Suresh to gain some insights into the feminine psyche. In addition, the hosts will take to analysing in detail “Naan Kolai Seyyum Pengal”(The Women I Murder), a short story collection by Latha (K. Kanagalatha) that won the Singapore Literature Prize for Tamil Fiction in 2008. Featuring a reading of Harini V's poem "Naan Aanaaga Piranthirunthaal" (If I were a man) too. 🎤🎤🌊💃🏾💃🏾🤓🤓📖

    சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வெளியின்  சிறப்பம்சம் என்னவென்றால், பெண் எழுத்தாளர்கள் இங்கு ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளனர். பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களில் (அதாவது, கவிதை, சிறுகதைகள், முதலியன) பெண் எழுத்தாளர்கள் தங்கள் முத்திரையை பதித்து வந்துள்ளனர். இருப்பினும்,  இப்படைப்புகளில் பெண்ணின் குரல் ஓங்கி ஒலிக்கிறதா? அவ்வாறு ஓங்கி ஒலித்து பெண்ணியம் பேசினால் தான் பெண் எழுத்தா ? பெண்ணின் அந்தரங்கங்களை எழுதும்போது பெண் எழுத்தாளர்கள் என்னென்ன தயக்கங்களை சந்திக்கின்றனர்? இத்தயக்கங்கள் அவர்களின் எழுத்துக்களை எவ்வாறு பாதிக்கின்றன? தொகுப்பாளர்கள் அஷ்வினி மற்றும் ஆயிலிஷா பெண் எழுத்தாளர் ராமா சுரேஷுடன் உரையாடுகிறார்கள், பெண்ணின் ஆன்மாவைப் பற்றி அலசி ஆராயப்போகிறார்கள். மேலும், 2008 ஆம் ஆண்டில் தமிழ் புனைகதைக்கான சிங்கப்பூர் இலக்கிய பரிசை வென்ற லதா (க. கனகலதா) எழுதிய சிறுகதைத் தொகுப்பான “நான் கொலை செய்யும் பெண்கள்”  பற்றியும்  விரிவாக திறனாய்வு  செய்ய போகிறார்கள். ஹரிணி வி எழுதிய "நான் ஆணாகப் பிறந்திருந்தால்" கவிதை வாசிப்பும் பாகத்தில் இடம்பெறுகிறது. 🎤🎤🌊💃🏾💃🏾🤓🤓📖

    To note: The “Naalai Oru Viduthalai” story that we cited in our discussion was first published in 1998, and included in Latha’s “Naan

    • 36 min
    Ep 6: Baby Steps: Emerging Children's Literature in Tamil | பாகம் 6: மழலையும் மொழியும்: வளர்ந்துவரும் சிறுவர் தமிழிலக்கியம்

    Ep 6: Baby Steps: Emerging Children's Literature in Tamil | பாகம் 6: மழலையும் மொழியும்: வளர்ந்துவரும் சிறுவர் தமிழிலக்கியம்

    “Literature is a textually transmitted disease, normally contracted in childhood.”

    -Jane Yolen, American Writer

    Yes Yes, we all know it’s been years since you were a child and it has been ages since you even sniffed a picture book😜 But do you still remember the time you learned a new word from the storybooks or the time when you understood more about this world through these books? Join us for a short trip down your childhood memory lane as our hosts Ayilisha and Ashwinii discuss Singapore Tamil Children’s literature. We talk to Abhi Krish, the founder of Eli Puli and Nool Monsters that create bilingual (Tamil and English) learning resources for children and Azhagunila, the author of children's Tamil picture books such as 'Kondama Kendama' and 'Melissavum Merlionum'. As creatives of Singapore Tamil literature for children, they share with us how Tamil children’s literature has evolved over time to be more attractive, illustrating contemporary issues for children. The episode also features a discussion of Singapore Tamil writer Sithuraj Ponraj's Kountilyan Sathuram, a book filled with adventure that follows 3 10-year-olds who use science to solve a mystery that their teacher has gotten trapped in, inside a forest in Kalimantan.



    "இலக்கியம் என்பது, நம்மைச் சிறு பிராயத்தில் எழுத்தின் மூலம் தொற்றிக்கொள்ளும் நோய்." என்கிறார் ஜேன் யோலன் எனும் அமெரிக்க எழுத்தாளர்.

    நீங்கள் கடைசியாக சிறுவராக இருந்தது... சிறுவர் படப்புத்தகத்தைப் படித்தது... வெகு காலத்திற்கு முன்னதாக இருக்கலாம்!😜 ஆனால் நீங்கள் கதைப்புத்தகங்களிலிருந்து புது புது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டது, நூல்களின் மூலம் இந்த உலகைப் பற்றி மேலும் புரிந்துகொண்ட காலம் உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா? தொகுப்பாளர்கள் ஆயிலிஷா மற்றும் அஷ்வினியுடன் இந்தப் பாகத்தில் உங்கள் சிறு வயதுப் பருவத்திற்குப் பின்னோக்கிச் செல்ல தயாராகுங்கள். எங்கள் விருந்தினர்களான அபி கிருஷ், அழகுநிலா ஆகிய இரு சிங்கைத் தமிழ் சிறுவரிலக்கிய படைப்பாளிகள் தமிழ் சிறுவர் இலக்கியம் எவ்வாறு நம் மழலைகளுக்கு ஈர்ப்புடையதாகவும் அவர்களுக்கு சமூக அறிவைக் கொண்டு சேர்ப்பதாகவும் வளர்ந்துள்ளது என்பதைப் பற்றி இந்தப் பாகத்தில் நம்முடன் கலந்துரையாடுகின்றனர். அபி கிருஷ், சிறுவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் கல்வி வளங்களைப் படைக்கும் 'எலி புலி' மற்றும் 'நூல் மான்ஸ்ட்டர்ஸ்' ஆகிய முன்னெடுப்புகளின் நிறுவனர். அழகுநிலா 'க

    • 33 min

Top Podcasts In Arts

Readery
Readery
Podcast Sobre App De Facebook
Alejandro Nava
McCartney: A Life in Lyrics
iHeartPodcasts and Pushkin Industries
Roundfinger Channel
Roundfinger Channel
Design Explorers by Agoda Design
Agoda Design
99% Invisible
Roman Mars