3 episodes

சங்கப் பாடல்களும் நம் சமூகவரைவும்!
Understanding Sangam Literature through the lens of our social perspectives.

Voices of the Last Sangam Tubelight Mediaworks

    • Society & Culture

சங்கப் பாடல்களும் நம் சமூகவரைவும்!
Understanding Sangam Literature through the lens of our social perspectives.

    திருமணத்தின் பிறப்பு! Birth of Marriage!

    திருமணத்தின் பிறப்பு! Birth of Marriage!

    What Tholkaapiyam, the oldest tamil scripture available has to say about marriage and types of marriages!

    தமிழில் கிடைத்த நூல்களுள் பழமையான நூல் தொல்காப்பியம், மனங்கள் இணையும் மணத்தினைப் பற்றி பாடியது காண்போம்!

    களவியல் பாடல்கள்:

    இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு 
    அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் 
    காமக் கூட்டம் காணும் காலை 
    மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் 
    துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.

    ஒன்றே வேறே என்று இரு பால்வயின் 
    ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் 
    ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப 
    மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே.

    சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப 
    இழிந்துழி இழிபே சுட்டலான.

    வண்டே இழையே வள்ளி பூவே 
    கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று 
    அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ 
    நின்றவை களையும் கருவி என்ப.

    நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் 
    கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்.

    குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின் 
    ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர். 

    கற்பியல் பாடல்கள்:

    கற்பு எனப்படுவது கரணமொடு புணரக் 
    கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை 
    கொடைக்குரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே.

    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

    திருக்குறள்கள்:

    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
    கூடி முயங்கப் பெறின். (1330)

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின். (54)

    கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது. (1092)

    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல. (1100)

    Episode Art courtesy: https://www.instagram.com/floatingmoon_art/

    • 1 hr 20 min
    காலங்களில் தமிழ்! Thamizh Epochs!

    காலங்களில் தமிழ்! Thamizh Epochs!

    தமிழ் மொழியின் இலக்கிய வரலாறு(அறிந்த தொடக்கத்தில் இருந்து 20ம் நூற்றாண்டு வரை)

    History of Thamizh literature(From known era to 20th Century)

    • 1 hr 6 min
    நிலமென்னும் உயிர்வெளி! The space of the living which is called Land!

    நிலமென்னும் உயிர்வெளி! The space of the living which is called Land!

    ஐந்தாக பகுக்கப்பட்ட நிலங்களும் அதன் பண்புகளும்.

    Attribution of Lands categorised as Five.  

    • 1 hr 21 min

Top Podcasts In Society & Culture

La vie en rose
EVEL ☆
Storytown
PGM Podcast Agency
Add to Playlist
BBC Radio 4
Hot Girls Only
Chloe Gervais
کافه فردا
رادیوفردا
Chez Nous avec Océane Andréa
Océane Andréa