66 episodes

Learning Sanathana Dharma to enjoy, serve universe as one family, my family.
இந்த உலகை ஒரே குடும்பமாக, என் குடும்பமாகக் கற்க சனாதன தர்மம் என்ற வழி.

Jagadhguru Seetharaman Jayaraman

    • Health & Fitness

Learning Sanathana Dharma to enjoy, serve universe as one family, my family.
இந்த உலகை ஒரே குடும்பமாக, என் குடும்பமாகக் கற்க சனாதன தர்மம் என்ற வழி.

    அதிகாரம் 23 - ஈகை - பகுதி 2

    அதிகாரம் 23 - ஈகை - பகுதி 2

    அதிகாரம் 23. ஈகை

    ஈகை- கொடை எது உயர்ந்தது ? உடல் அமைப்பு கொடுக்கவா, வாங்கவா ? யாகங்கள் எதற்கு ? ஈந்தேன் - தந்தேன் - கொடுத்தேன் வேறுபாடு ? அழிபசின்னா என்ன ? நோய்-பிணி வேறுபாடு ? ஸஹனௌ புனக்து 

    வரலாறும் வாக்கும்: திருமூலர், இளையான்குடி மாற நாயனார், வள்ளலார் ராமலிங்க அடிகளார், பிடியரிசித் திட்டம், மஹாபெரியவா, சங்கராச்சாரியார், ஔவையார், மணிமேகலை, அமுதசுரபி, ஆபுத்திரன், திருநின்றவூர், பெருந்தலைச் சாத்தனார், பழனி வள்ளல் குமணன், திருநின்றவூர் காளத்தி வள்ளல்

    அருஞ்சொற்பொருள்: அற்றார், வைப்புழி, ஈயார், பாத்தூண், மரீஇயவனை, இன்னாது, ஈத்து, ஈதல், உவக்கும், வன்கணவர், மன்ற, தமியர், இயையாக்கடை

    மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை

    தானம் தவம் உயர்ச்சி தளன்மை (இளகிய மனம்)- தேனின்

    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

    பசிவந்திட பறந்து போகும் - ஔவையார்



    ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - கொன்றைவேந்தன்



    குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

    பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

    நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

    பசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை



    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    • 37 min
    அதிகாரம் 23 - ஈகை - பகுதி 1

    அதிகாரம் 23 - ஈகை - பகுதி 1

    அதிகாரம் 23. ஈகை - கொடை எது உயர்ந்தது ? உடல் அமைப்பு கொடுக்கவா, வாங்கவா ? யாகங்கள் எதற்கு ? ஈந்தேன் - தந்தேன் - கொடுத்தேன் வேறுபாடு ? மண் பிள்ளையாரும் அருகம்புல்லும் ? அன்னதானத்தின் உயர்வு, இயற்கை சீற்றங்கள் ஏன் ? உயிரோடு இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி ? ப்ராஹ்மணன் வேலை ?  ஏக சந்த க்ராஹி ? ஐம்பெருங்காப்பியங்கள் ? ஏகாதசி அன்று சாப்பிடலாமா ? ஒரே குறளுக்கு நான்கு பொருள், பசி வந்தால் எந்த பத்தும் பறந்து போகும் ? அபர்ணா பெயர்க்காரணம் ? அன்னம் ந நிந்த்யாத், அன்னம் பஹுகுர்வீத வேத வாக்குகளுக்குப் பொருள் ?   

    வரலாறும் வாக்கும்: திருமூலர், இளையான்குடி மாற நாயனார், கழைதின் யானையார், புறநானூறு, வள்ளலார் ராமலிங்க அடிகளார், பிடியரிசித் திட்டம், மஹாபெரியவா, சங்கராச்சாரியார், ஔவையார், கம்பத்து இளையனாரும் அருணகிரிநாதரும், பாரி, பேகன், கர்ணன், சிபிச் சக்ரவர்த்தி, சப்தஸ்தானம்   

    அருஞ்சொற்பொருள்: தண்டு, ஏல், ஆர்த்த, நீரது, ஆறு, எவ்வம், இலன், இரவு, இன்னாது   

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    • 48 min
    அதிகாரம் 22 - ஒப்புறவு அறிதல் - பகுதி 2

    அதிகாரம் 22 - ஒப்புறவு அறிதல் - பகுதி 2

    கொடையும் ஈகையும், ஊருணி, மரம், மழை, இயற்கை, எந்த பருவத்தில் கொடை செய்வது? எப்படி ஆசைகளைத் தீர்த்துக் கொள்வது ? ஆண்டவன் நமக்கு இட்ட பணி என்ன ? இறைவன் யாரை விரும்புகிறான் ? தரமான விவசாயத்திற்கு வழி ? அறிவியல் ப்ரசாதம் !! பரோபகாரார்த்தம் இதம் ஶரீரம் - என் கடன் பணி செய்து கிடப்பதே, மனிதன் எப்படி தெய்வமாகிறான் ? அரிய பொருளை விடுவோமா ?

    கதைப்பகுதிகள்: யயாதி, ததீசி, பாண்டவர்கள், கணம்புல்ல நாயனார், இளையான்குடி மாற நாயனார், கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர், கனகதாரா, அருணகிரிநாதர், ஹரிச்சந்த்ரன்

    அருஞ்சொற்பொருள்: நயன், தகை, ஒல்கார், நல்கூர்ந்தான், முசியாமல், மிடி

    • 29 min
    அதிகாரம் 22 - ஒப்புறவு அறிதல் - பகுதி 1

    அதிகாரம் 22 - ஒப்புறவு அறிதல் - பகுதி 1

    21 அதிகாரங்கள் சுருக்கம்: திரிகரண சுத்தி (மனம், மொழி, மெய்)

    ஒப்புரவறிதல் - அதிகார விளக்கம், ஈகை-கொடை, அன்பு-அருள் வேறுபாடு

    காதற்ற ஊசி எது ? தந்தையின் கடமை என்ன ? உயிர் இருக்கு என்பதை எப்படி அறிவது ? விருந்து உபசரிப்பு எப்படி இருக்கனும்? உதவாதவர் பொருள் என்ன ஆகும் ?

    அருஞ்சொற்பொருள்: ஊருணி, கைம்மாறு, கடப்பாடு, மாரிமாட்டு, தாள், தக்கார், வேளாண்மை, தகவிலர், புத்தேள், 

    வரலாறு: பட்டிணத்தார், சேந்தனார், முதல்-இடை-கடை ஏழு வள்ளல்கள், யட்ச பிரச்னம், தர்மராஜா, ஔவையார், எம்.ஜி.ஆர், காமராஜர், ததீசி முனிவர், 'அமரபாரதி' நடராஜ ஶர்மா

    எது அழகு:

    சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த

    விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம்

    கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட

    வடுத்துளைத்த கல்லபிர மம் - ஔவையார்



    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

    நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

    கொடையும் பிறவிக் குணம் - ஔவையார்



    முதல் ஏழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்

    இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்

    கடையேழு வள்ளல்கள்: பாரி, நெடுமுடி காரி, வல்வில் ஓரி, நள்ளி, ஆய் அண்டிரன், அதியமான், பேகன்

    • 42 min
    அதிகாரம் 21 - தீவினையச்சம் - பகுதி 2

    அதிகாரம் 21 - தீவினையச்சம் - பகுதி 2

    தீவினையச்சம் - அதிகார விளக்கம், முக்கரண சுத்தி ? சொற்குற்றங்கள் ? திரைத்துறை எப்படி இருக்கணும் ? இறைவன் எப்போது கைவிடுகிறான் ? தவறு-தப்பு வேறுபாடு ? பிராயச்சித்தம் பலன் தருமா ? தனிப்பகை

    அருஞ்சொற்பொருள்: அடல், அடும், வீயாது, உய்வர், எனைத்தொன்றும், துன்னற்க, பால், மருங்கு, அவதூறு, விகாரம்

    உதாரணங்கள்: எம்.ஜி.ஆர், ஏ.பி.நாகராஜன், ஆர்.எஸ்.மனோகர், வீயாது உடம்போடு நின்ற உயிரும் இல்லை - புறநானூறு, சிலப்பதிகாரம், சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - திருமுருகாற்றுப்படை

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    • 22 min
    அதிகாரம் 21 - தீவினையச்சம் - பகுதி 1

    அதிகாரம் 21 - தீவினையச்சம் - பகுதி 1

    முன் அதிகாரங்கள் சுருக்கம், தீவினையச்சம் - அதிகார விளக்கம், பெண்களின் உயர்வு, நாக்கு-கண் ஏன் ஈரமாயிருக்கிறது? முக்கரணங்கள் எவை ? சொற்குற்றங்கள் எவை ? தீய செயல் செய்யாமல் இருப்பது எப்படி ? திரைத்துறை எப்படி இருக்கணும்? ஏன் தீயவை செய்கிறோம் ? தீவினையை விட ஏன் தீ நல்லது ? கல்வியும் அறிவும், மானங்கெட்ட சாரி, இறைவன் எப்போது கைவிடுகிறான் ?  

    அருஞ்சொற்பொருள்: விழுமியார், செருக்கு, செறுவார், இலன், பெயர்த்து  

    உதாரணங்கள்: ராமன், ஆர். எஸ். மனோஹர், ஏ.பி.நாகராஜன், ஆர்.எஸ்.மனோகர்  

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    • 35 min

Top Podcasts In Health & Fitness

On Purpose with Jay Shetty
iHeartPodcasts
The Psychology of your 20s
iHeartPodcasts
The Mindset Mentor
Rob Dial
Sweat Daily with Kayla Itsines
Storyglass
The School of Greatness
Lewis Howes
Wisdom & Wellness with Mpoomy Ledwaba
Africa Podcast Network