SBS Tamil - SBS தமிழ்

குழந்தைகள் தமிழ் கற்பது பெற்றோரின் கையில் இருக்கிறதா அல்லது குழந்தைகளுக்கும் பங்கு உண்டா?

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோரோடு ஒரு சந்திப்பு. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரின் பெற்றோரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு. இதில் கலந்து கொண்டவர்கள்: ஸ்ரீநிதி, சுகந்தி, நித்யா, வள்ளிப்பன், ராஜேஷ், மூர்த்தி ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.