1 min

59. விழி | EYE Tamil Poems | Blank Thoughts

    • Self-Improvement

அந்தரத்தில் நீர்பூத்து

அலர்ந்தெழுந்தத் தாமரைகள்

அந்தக் கருணைவிழிகள்!

ஈவோர் அரிதாகிய இவ்வுலகின்கண்

இரக்கும் கருணை அளித்து

இல்லது அறியாது அளவிறந்து

அன்பை அள்ளித்தரும்

அயிரை மீன்கள்அவை!

அந்தக் கண்களில்

சந்திரன் குடிகொண்டுள்ளானோ?

அவைஅளிக்கும் தண்மைஎம்

இதயம்தனை இதப்படுத்தும்.

கண்டவுடன் நம்கஷ்டத்தை

அளவெடுக்கும் அந்தக்கயல்விழிகளில்

என்னஅளவுகோலா இருக்கின்றது?

பதப்படுத்தும் அப்பார்வைகள்தான்

நம்மை பத்திரப்படுத்தும்.

இலக்குகொண்டு இந்தியாவில்

வறுமைக்கு ஒழிப்புதரும்

அந்தவிழி ஒன்றாவது

விழித்தெழுந்தால் விண்ணைத்தாண்டி

நம்ஏற்றம் ஏறிச்செல்லும்!

அந்தரத்தில் நீர்பூத்து

அலர்ந்தெழுந்தத் தாமரைகள்

அந்தக் கருணைவிழிகள்!

ஈவோர் அரிதாகிய இவ்வுலகின்கண்

இரக்கும் கருணை அளித்து

இல்லது அறியாது அளவிறந்து

அன்பை அள்ளித்தரும்

அயிரை மீன்கள்அவை!

அந்தக் கண்களில்

சந்திரன் குடிகொண்டுள்ளானோ?

அவைஅளிக்கும் தண்மைஎம்

இதயம்தனை இதப்படுத்தும்.

கண்டவுடன் நம்கஷ்டத்தை

அளவெடுக்கும் அந்தக்கயல்விழிகளில்

என்னஅளவுகோலா இருக்கின்றது?

பதப்படுத்தும் அப்பார்வைகள்தான்

நம்மை பத்திரப்படுத்தும்.

இலக்குகொண்டு இந்தியாவில்

வறுமைக்கு ஒழிப்புதரும்

அந்தவிழி ஒன்றாவது

விழித்தெழுந்தால் விண்ணைத்தாண்டி

நம்ஏற்றம் ஏறிச்செல்லும்!

1 min