Kadhai Osai - Tamil Audiobooks

Aezham Ulagam - Jeyamohan | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

المشتركون فقط
நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.