E2: திருப்பாடல்கள் 2 | சங்கீதம் 2 | PSALMS 2 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

Goal: We, Invest Parents Academy, want to inspire you daily morning with God's word, the Manna. So that you and we would walk in the way that JESUS CHRIST guided us.
We are happy and THANKS a lot for listening, If you like this podcast , please rate it 5 STARS on Apple Podcast! Have a Blessed Day Ahead!
If you know someone who could use this Podcast, SHARE this with them!
Want to keep in touch with us???
https://urlgeni.us/instagram/invest_parents ---> FOLLOW
https://urlgeni.us/instagram/angelinsahana ---> FOLLOW
https://urlgeni.us/youtube/channel/invest_parents ---> SUBSCRIBE
https://ip-10.creator-spring.com - BUY YOUR T-SHIRT HERE
திருப்பாடல்கள் 2: 1-12 (The Book of Psalms)
கடவுள் தேர்ந்து கொண்ட அரசர்
1வேற்றினத்தார் சீறி எழுவதேன்?
மக்களினங்கள் வீணாகச்
சூழ்ச்சி செய்வதேன்?
2ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு
பெற்றவர்க்கும் எதிராகப்
பூவுலகின் அரசர்கள்
அணிவகுத்து நிற்கின்றார்கள்;
ஆள்வோர் ஒன்றுகூடிச்
சதிசெய்கின்றார்கள்;
3‛அவர்கள் பூட்டிய தளைகளைத்
தகர்ப்போம்;
அவர்கள் வைத்த கண்ணிகளை
நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’
என்கின்றார்கள்.
4விண்ணுலகில் வீற்றிருப்பவர்
எள்ளி நகைக்கின்றார்;
என் தலைவர் அவர்களைப் பார்த்து
ஏளனம் செய்கின்றார்.
5அவர் சினமுற்று
அவர்களை மிரட்டுகின்றார்;
கடுஞ்சினத்தால் அவர்களைக்
கலங்கடிக்கின்றார்;
6‛என் திருமலையாகிய சீயோனில்
நானே என் அரசரைத்
திருநிலைப்படுத்தனேன்.’
7ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை
நான் அறிவிக்கின்றேன்;
‛நீர் என் மைந்தர்; இன்று நான்
உம்மைப் பெற்றெடுத்தேன்.
8நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;
பிறநாடுகளை உமக்கு
உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை
உமக்கு உடைமையாக்குவேன்.
9இருப்புக் கோலால்
நீர் அவர்களைத் தாக்குவீர்;
குயவன் கலத்தைப்போல
அவர்களை நொறுக்குவீர்.’
10ஆகவே, மன்னர்களே,
விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே,
எச்சரிக்கையாயிருங்கள்.
11அச்சத்தோடு ஆண்டவரை
வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!
அவர்முன் அக மகிழுங்கள்!
12அவர் சினங்கொள்ளாதபடியும்
நீங்கள் வழியில் அழியாதபடியும்
அவரது காலடியை முத்தமிடுங்கள்;
இல்லையேல், அவரது சினம்
விரைவில் பற்றியெரியும்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர்
அனைவரும் பேறுபெற்றோர்.
Disclaimer: Invest Parents Academy does not own the right to the script. All the audios shared are not depleting the quality of the Christianity or anybodyelse. The contents are used for educational purpose only. However, if you have any issues with this, please contact us by the email id investparents@gmail.com
SOURCE: திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3
#tamilbiblereadingdaily #catholicbible #psalmstamil
Informações
- Podcast
- Publicado25 de junho de 2021 às 14:33 UTC
- Duração4min
- Temporada1
- Episódio2
- ClassificaçãoLivre