படலை - Padalay - Books, Music and Life in Tamil

Sense & Sensibility - ஜேன் ஓஸ்டினின் படைப்புலகம்

சமூக யதார்த்தம், மனித உணர்வுகள், குடும்பங்களிடையேயான முரண்பாடுகள் எனப் பல பண்புகளைத் தீவிரமாகவும் மெலிதான நையாண்டியோடும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிய நாவலாசிரியர் ஜேன் ஓஸ்டின். அவருடைய ‘Sense and Sensibility’ நாவலை மையமாக வைத்து இந்த உரையாடல் இடம்பெறுகிறது.

எலினோர், மரியானே, பிராண்டன், எட்வேர்ட், திருமதி டாஷ்வுட், வில்லபி, பஃன்னி போன்ற பல தனித்துவமான பாத்திரங்களினூடு மனித அகத்தின் முரண்பாடுகளை இந்நாவலில் ஜேன் மிக நுணுக்கமாக  வெளிப்படுத்தியிருப்பார். 

ராஜீவ்மேனன் திரைக்கதை எழுதி இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம் ‘Sense and Sensibility’ நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

இந்த உரையாடலில் ஜேகேயோடு இணைந்து பங்களித்திருக்கும் கலாதேவி ஒரு சிறந்த வாசகர். ஜேன் ஓஸ்டினின் நூல்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவர். கம்பனின் பாடல்களை முன்வைத்து அவர் எழுதும் ‘கம்பனின் களிப்பெட்டி’ என்ற தொடர் கிடுகுவேலி எனும் அவருடைய தளத்தின் தொடர்ந்து வெளியாகிறது.

www.padalay.com

https://www.facebook.com/jeyakumaran

https://kiduguveli.wordpress.com/