Vikatan News update | Tamil News

Hello Vikatan
Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

  1. ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

    8月21日

    ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவுசெய்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்தியல்ரீதியாக மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?

    7 分鐘
  2. Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்? News - 14/08/2024

    8月14日

    Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்? News - 14/08/2024

    மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது! அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி பங்குச் சந்தையில் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, பெர்முடா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக சில நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்ததாகவும், இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகளின் விலையை மறைமுகமாக உயர்த்தி முறைகேடு செய்ததாகவும் முதல் அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது ஹிண்டன்பர்க்.

    4 分鐘

簡介

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

若要收聽兒少不宜的單集,請登入帳號。

隨時掌握此節目最新消息

登入或註冊後,即可追蹤節目、儲存單集和掌握最新資訊。

選取國家或地區

非洲、中東和印度

亞太地區

歐洲

拉丁美洲與加勒比海地區

美國與加拿大