12 avsnitt

இந்திய அறிவியல் கழகத்தில் ‘வாசகர் வட்டம்’ கூட்டம் கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் பெரும்பாலும் செவ்வாய் கிழமை இரவு நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு சிறந்த படைப்பாளிகளின் கதை, கவிதை, கட்டுரை என தமிழின் கலை இலக்கிய கூறுகளை வாசித்து ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அந்த படைப்புகளின் மூலம் ஒவ்வொரு மனிதனும் தம்மை சுயபகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் பணியை மேற்கொள்கிறோம்.

வாசகர் வட்டம் : Vaasagar Vattam IISc Thamizh Peravai

    • Konst

இந்திய அறிவியல் கழகத்தில் ‘வாசகர் வட்டம்’ கூட்டம் கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் பெரும்பாலும் செவ்வாய் கிழமை இரவு நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு சிறந்த படைப்பாளிகளின் கதை, கவிதை, கட்டுரை என தமிழின் கலை இலக்கிய கூறுகளை வாசித்து ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அந்த படைப்புகளின் மூலம் ஒவ்வொரு மனிதனும் தம்மை சுயபகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் பணியை மேற்கொள்கிறோம்.

    மூன்று வேளாண் சட்டங்கள் : கூட்டம் 214: கொள்கை கலந்துரையாடல்

    மூன்று வேளாண் சட்டங்கள் : கூட்டம் 214: கொள்கை கலந்துரையாடல்

    நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் கடும் எதிர்ப்புகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று கூறுகிறார். பொதுவாக இது விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்கு சாதகமானது, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப்பாதுகாப்பை அழிப்பது என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    இந்த 3 சட்டங்கள் எதை நோக்கியது?

    இதனை ஒரு எளிய மற்றும் பக்கச்சார்பற்ற கலந்துரையாடலாக நடத்த விழைகிறது வாசகர் வட்டம். அனைவரும் மூன்று மசோதாக்களையும் ஓரளவிற்கு படித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இந்த மசோதாக்களை ஆராய்வதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். அனைவரும் கலந்துகொண்டு கலந்துரையாடலை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் !

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message

    • 47 min
    மறுவேலை - ஜேசன் பிரைட், டேவிட் ஹெய்னியர் : கூட்டம் 213: புத்தக வாசிப்பு

    மறுவேலை - ஜேசன் பிரைட், டேவிட் ஹெய்னியர் : கூட்டம் 213: புத்தக வாசிப்பு

    வாசிப்பவர்: சரவணக்குமார்

    டிரெயில்ப்ளேசிங் மென்பொருள் நிறுவனமான 37 சிக்னல்களின் நிறுவனர்களிடமிருந்து, ஒரு வித்தியாசமான வணிக புத்தகம் - இது ஒரு புதிய யதார்த்தத்தை ஆராய்கிறது. இன்று, யார் வேண்டுமானாலும் வியாபாரத்தில் இருக்க முடியும். அணுக முடியாத கருவிகளை இப்போது எளிதாக அணுகமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமில்லாத விஷயங்கள், இப்போது எளிமையாக்கப் பட்டுருக்கிறது.

    அதாவது யார் வேண்டுமானாலும் ஒரு தொழிலைத் தொடங்கலாம். பரிதாபகரமான 80 மணி நேர வாரங்கள் வேலை செய்யாமலும் அல்லது உங்கள் வாழ்க்கைச் சேமிப்பைக் குறைக்காமலும் நீங்கள் அதைச் செய்யலாம். உங்கள் நாள் வேலை உங்களுக்கு தேவையான அனைத்து பணப்புழக்கத்தையும் வழங்கும் போது நீங்கள் அதை பக்கத்தில் தொடங்கலாம். வணிகத் திட்டங்கள், கூட்டங்கள், அலுவலக இடம் ஆகியவற்றை மறந்து விடுங்கள் - உங்களுக்கு அவை தேவையில்லை.

    அதன் நேரடியான மொழி மற்றும் எளிதான சிறந்த அணுகுமுறையுடன், மறுவேலை என்பது சொந்தமாகச் செய்ய வேண்டும் என்று கனவு கண்ட எவருக்கும் இது ஒரு சரியான விளையாட்டு புத்தகம். ஹார்ட்கோர் (Hardcore) தொழில்முனைவோர், சிறு வணிக உரிமையாளர்கள், வெளியேற விரும்பும் நாள் வேலைகளில் சிக்கித் தவிக்கும் நபர்கள், இனி பட்டினி போட விரும்பாத கலைஞர்கள் அனைவரும் இந்த பக்கங்களில் மதிப்புமிக்க உத்வேகத்தையும் வழிகாட்டலையும் காண்பார்கள்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message

    • 1 tim. 48 min
    இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா : கூட்டம் - 212 : புத்தக வாசிப்பு

    இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா : கூட்டம் - 212 : புத்தக வாசிப்பு

    பொன். சின்னத்தம்பி முருகேசன் (தமிழில்)

    வாசிப்பவர்: புனிதரூபன்

    இயற்பியலின் தாவோ” நவீன இயற்பியலுக்கும் கிழக்கத்திய இறைஞானத்திற்கும் இடையிலான ஒப்புமைகள் பற்றிய நூல். இது கண்ணுக்குப் புலப்படாத அணுவியல், நுண்ணணுவியல் உலகினையும், மீப்பெரும் அளவிலான பேரியக்க மண்டலத்தையும் சார்பியல், குவாண்டம் கொள்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும்போது உணர்ந்து அறியக்கூடிய உண்மைகள் தொன்மை வாய்ந்த கிழக்கத்திய தத்துவார்த்த மரபுகளோடு ஆழமான ஒப்புமை கொள்கின்றன என்பதை நிலைநிறுத்துகிற ஆய்வு ஆவணம்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message

    • 1 tim. 18 min
    சிறை & வாரணாசி - சரீரம் தொகுப்பு - நரன் : கூட்டம் - 211 : சிறுகதை வாசிப்பு

    சிறை & வாரணாசி - சரீரம் தொகுப்பு - நரன் : கூட்டம் - 211 : சிறுகதை வாசிப்பு

    வாசிப்பவர்: ஹேமபிரபா

    எழுத்தாளர் மற்றும் கவிஞரான நரன், பிறந்தது விருதுநகரில். பள்ளிக்காலங்களில் கிறித்துவ ஈடுபாடு தீவிரமாய் இருந்திருக்கிறது. தேவாலய நாடகங்கள் போடுவதும், அதில் நடிப்பதும் இவருக்குப் பிடித்திருந்தது. நாடகங்களை இவரே எழுதத் தொடங்கும்போது விவிலியம் சார்ந்து அதிகம் வாசித்திருக்கிறார். இவரின் இன்றைய எழுத்துக்களிலும் இதன் தாக்கம் இருக்கிறது. தேவதச்சனின் கவிதைகளும் அவருடன் ஏற்பட்ட உரையாடலும், இவரின் கவிதைகளை இன்று வரை வழி நடத்துவதாக நினைக்கிறார். ‘சரீரம்’, ‘கேசம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், ‘மிளகு, பருத்தி மற்றும் யானைகள்’, ‘லாகிரி’, ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’,  ‘உப்புநீர் முதலை’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message

    • 1 tim. 1 min.
    வாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல் - விக்டர் பிராங்கல் : கூட்டம் - 210 : புத்தக வாசிப்பு

    வாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல் - விக்டர் பிராங்கல் : கூட்டம் - 210 : புத்தக வாசிப்பு

    வாசிப்பவர் : ராஜா செல்வம்

    'ஏன் வாழவேண்டும் என்பதற்கு ஒரு காரணத்தைக் கொண்டிருக்கும் மனிதன், எப்படியாவது எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வான்’.

    உலகின் 24க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. ஆசிரியர் வதைமுகாம்களில் நிலவும் நெருக்கடி மற்றும் துன்புறுத்தலுக்கு நடுவே உயிர் வாழ்வதற்கும், எஞ்சியிருப்பதற்கும் ஆதாரமாக அவருக்கு அமைந்த நம்பிக்கையின் நீட்சியே இந்நூல். மனித விடுதலை, தன் மதிப்பு, வாழ்வின் அர்த்தம் குறித்த மெய்யான தேடல் பற்றிய ஆழ்ந்த பார்வையோடும் மனித மேன்மை குறித்த நோக்கோடும் உருப்பெற்றிருக்கும் புத்தகம் இது. இது ஒரு வரலாற்று ஆவணம். ஓர் இறுதி எச்சரிக்கை. பெறுமதியான சிந்தனையும் நம்பிக்கையும் நோக்கமும் இழைந்தோடும் புத்தகம்.

    புத்தகத்தின் மையக்கருத்து: மனிதன் தனது மனத் துணிவால் புறச்சூழல்களை எதிர்த்து நிற்க முடியும். அதனால்தான் ஹிட்லரின் சித்ரவதைக் கூடங்களில் சிக்கி சின்னாபின்னமாகி உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட லட்சக்கணக்கானோர்களைப் பற்றி யோசிக்காமல் அதிலும்  சிலர் மட்டும் எப்படி உயிருடன் இருந்தார்கள் என்பதைக் கண்டறிவதிலேயே அக்கறை கொண்டிருந்தார் ஆசிரியர். அதன் வெளிப்பாடே இந்நூல்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message

    • 1 tim. 13 min
    காலை எழுந்தவுடன் தவளை! - பிரையன் டிரேசி : கூட்டம் - 209 : புத்தக அறிமுகம்

    காலை எழுந்தவுடன் தவளை! - பிரையன் டிரேசி : கூட்டம் - 209 : புத்தக அறிமுகம்

    வாசிப்பவர்: சு.க.பரிதி

    காலம் தாழ்த்துவதை விட்டொழித்து, குறைவான நேரத்தில் அதிகமான விஷயங்களைச் சாதிப்பதற்கான 21 வழிகள் பற்றி ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.

    நாம் செய்ய நினைக்கும் அனைத்தையும் செய்து முடிக்க அதிக நேரம் பிடிக்கலாம், சில நேரங்களில் அவற்றை செய்ய இயலாமலும் போகலாம். சாதனையாளர்கள் எல்லா செயல்களையும் செய்ய முற்படுவதில்லை, மிக முக்கியமான செயல்களில் மட்டுமே அவர்களின் சிந்தனை ஓட்டம் செலவிடப்படுகிறது. அதாவது, அவர்கள் தவளைகளை உட்கொள்கிறார்கள். 😊

    ஒரு பழமொழி உண்டு, காலை எழுந்தவுடன் முதலில் தவளை உட்கொள்பவருக்கு ஒரு மன நிறைவு இருக்குமாம், அந்த நாளின் மிக மோசமான பகுதி கடந்து விட்டது என்று. அதைப் போலவே இப்புத்தகத்தின் ஆசிரியர், தவளை உட்கொள்வதை, ஒரு நாளின் சவாலான செயலுக்கு தொடர்பு படுத்துகிறார்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message

    • 42 min

Mest populära poddar inom Konst

Expressens bokklubb
Expressen
Jordkommissionen
Perfect Day Media
Recept tack!?
Perfect Day Media
This is 40!
Karin Bastin & Isabelle Monfrini
Meny
Sveriges Radio
Skilda världar
Nicole Falciani & Anna Pankova