19 episodes

தமிழை வாசித்தும் நேசித்தும் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துப் போகிற நம் பற்றுடைய மனப்பாங்குதான் தமிழ் மொழியின், பண்பாட்டின், தமிழர் வரலாற்றின் தொடர்ச்சிக்கான காரணங்களுள் அடிப்படையானவை எனலாம்.

தமிழை வளர்க்கும் நற்பெயர் நமதென்றால், அதை வளர்க்காத குறையும் நம்முடையதுதானே?

தமிழ் என்ற மொழியும் பண்பாடும் நம் வேர்கள். அந்த வேர்களை, விழுதுகளான நம் பிள்ளைகள் இறுகப் பிடிக்கச் செய்வது நம் கைகளில்தான் உள்ளது.
இல்லையெனில், மரபு மாற்றுப் பயிர்போல, அடையாளம் இல்லாச் சமூகத்தை விட்டுச் செல்லும் பழியும் நம்மையே சேரும்.

அற்றைத் திங்கள்..... வலையொலியில் தமிழொல‪ி‬ நன்முல்லை

    • Society & Culture

தமிழை வாசித்தும் நேசித்தும் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துப் போகிற நம் பற்றுடைய மனப்பாங்குதான் தமிழ் மொழியின், பண்பாட்டின், தமிழர் வரலாற்றின் தொடர்ச்சிக்கான காரணங்களுள் அடிப்படையானவை எனலாம்.

தமிழை வளர்க்கும் நற்பெயர் நமதென்றால், அதை வளர்க்காத குறையும் நம்முடையதுதானே?

தமிழ் என்ற மொழியும் பண்பாடும் நம் வேர்கள். அந்த வேர்களை, விழுதுகளான நம் பிள்ளைகள் இறுகப் பிடிக்கச் செய்வது நம் கைகளில்தான் உள்ளது.
இல்லையெனில், மரபு மாற்றுப் பயிர்போல, அடையாளம் இல்லாச் சமூகத்தை விட்டுச் செல்லும் பழியும் நம்மையே சேரும்.

    மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்

    மக்களாட்சியிலும் பொருந்தும் புறநானூற்று அறவுரைகள்

    2024ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் இரண்டு திருவிழாக்கள்- ஒன்று மதுரை மாநகரத்து மீனாட்சித் திருமணம்; மற்றொன்று இந்தியத் திருநாட்டின் மக்களாட்சித் திருவிழா. மேளச்சத்தம், பெருங்கூட்டம், ஒலிப்பெருக்கியில் தமிழ்முழக்கம் என்று ஆரவாரத்துடன் காத்திருப்பவர் ஆற்றிலிறங்கும் கள்ளழகர் மட்டுமல்ல; தேர்தல் களமிறங்கும் அரசியல்வாதிகளும்தான். போராட்டம், பட்டிமன்றம், கலந்துரையாடல், பரப்புரை என்று பலவாறாகப் பேசிப்பேசித் தேர்தல் நாட்கள் நெருங்கிவிட்டன. ஏப்ரல் மாதம்முதல் தேர்தல் காணும் இந்தியாவின் அரசியல் நிலையைப் பற்றித் தெளிவாகப் பேசத் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, நாம் இங்கு அலசப்போவது…மேலும்

    ஏறு தழுவல்- இன்றும் தொடரும் கலித்தொகைக் காட்சிகள்

    ஏறு தழுவல்- இன்றும் தொடரும் கலித்தொகைக் காட்சிகள்

    சென்ற பதிவில் கண்ட பொங்கல் காட்சியின் தொடர்ச்சிபோலவே, இன்றும் தொடரும் ஏறு தழுவும் வீர விளையாட்டின் சுவைமிகு காட்சிகளை இங்கு நாம் பார்க்கப் போகிறோம். பொங்கலும் சரி அதைத் தொடரும் ஏறு தழுவலும் சரி, ஊர்க்கூடி இழுக்கும் தேரினைப்போல ஊரார் பங்கேற்றுப் பொதுமக்கள் ஒன்றுகூடித் தொடர்ந்துக் கொண்டாடிவரும் தொல்தமிழர் விழாக்கள். அப்படிப்பட்ட தொல்தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் ஏறு தழுவல் இன்றுவரைத் தொடரும் அழகைக் காட்டுகிறது எட்டுத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகை. போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில்…மேலும்

    • 9 min
    மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்

    மண்மணம் வீசும் தைத்திங்கள் திருநாள்- தொடரும் தொல்தமிழர் வழக்கங்கள்

    தமிழால் இணைந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திங்கள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஆண்டு முழுதும் சமயம் சார்ந்த, புராணக் கதைகளோடு இணைந்த பல்வேறு பண்டிகைகள் வந்து போகும். ஆனால், பொங்கல் என்ற ஒரு சொல் போதும், தமிழ் மண்ணின் மணம் பரப்பும் எண்ணில்லாக் காட்சிகள் நம் நினைவலைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும். மண்ணுக்கு மணம் உண்டா என்றால், ‘பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள்…மேலும்

    • 10 min
    மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

    மதுரைக்காஞ்சியின் வியக்க வைக்கும் காட்சிகள்

    சென்ற பகுதியில் மதுரை மாநகரைச் சுற்றி வந்தபிறகு, இனி, தமிழின் இனிமையும் உவமைச் செழிப்பும் பொருள் சிறப்பும் பொருந்திய மதுரைக்காஞ்சியில் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒருசில காட்சிகளைப் பார்ப்போம். 1. கரும்பு ஆலைகள்  வளமான மருத நிலத்திற்குள் நுழைந்தால், அங்கு ஒலிக்கும் பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். அதில் ஒன்று, கரும்பாலைகளின் ஓசை என்று முன்னரே பார்த்தோம்- கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை (258). கரும்பு ஆலைகள் வைத்துக் கரும்பின் பாகும் கற்கண்டும் உருவாக்கி, அவற்றினின்று பலவித…மேலும்

    • 8 min
    மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்

    மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை மாநகர்

    முந்தைய பகிர்வில், மதுரைக்காஞ்சி வழியாகப் பாண்டிய நாட்டு வளத்தைப் பார்த்தோம். இனி மதுரை மாநகரைச் சுற்றி வருவோம்.. வாருங்கள். மதுரை மாநகர் எப்படி இருந்தது? 782 அடிகள் கொண்டது மதுரைக்காஞ்சி. அதில், 327ஆவது வரியில் தொடங்கும் மதுரையின் சிறப்பு, 699ஆவது வரியில் நிறைவடைகிறது. 372 வரிகளில் மதுரை நகரை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர். புத்தேள் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (698 – 699) வானுலகத்தில் உள்ளவர்கள் வியந்து…மேலும்

    • 5 min
    மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்

    மதுரைக்காஞ்சி காட்டும் பாண்டிய நாட்டு வளம்

    தமிழின் தொன்மை இலக்கியங்களான எட்டுத் தொகை-பத்துப் பாட்டு நூல்கள், அக்காலத்தே செழித்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் அதன் சிறப்புக்களையும் எண்ணியெண்ணிக் களிப்படையச் செய்பவை; படிக்கப் படிக்கச் சிந்திக்கத் தூண்டுபவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணின் நிகழ்வுகளை நேரலைபோல நமக்குக் காட்டுபவை. சங்க இலக்கியங்கள் மீது அதைப் படிப்பவர்களுக்குத் தீராத ஈர்ப்பு வருவது எதனால்? அவரவர் பார்வைக்கேற்ப காரணங்கள் பலவாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதன்மையான காரணம், அவை உங்களையும் என்னையும் போன்ற இயல்பான மக்களின் அன்றாட…மேலும்

    • 7 min

Top Podcasts In Society & Culture

Inconceivable Truth
Wavland
The Interview
The New York Times
Stuff You Should Know
iHeartPodcasts
Shawn Ryan Show
Shawn Ryan | Cumulus Podcast Network
This American Life
This American Life
Expedition Unknown
Discovery