Hindu Mahasamuthiram

Hindu Mahasamuthiram
Hindu Mahasamuthiram Podcast

The history of Bharat, its cultural soft power and connected stories that span the Indian Ocean and beyond

  1. 06/02/2021

    பர்மாவில் நடக்கும் நிகழுவுகளும் புவிசார் அரசியல் பின்னணியும்

    பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று பர்மா நாட்டில் மிலிட்டரி ஜனதா என்று சொல்லப்படும் மியான்மார் army, emergency அறிவித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது  நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அபார வெற்றியை கண்ட ஆங் சான் சூகி சிறையடைக்க பட்டுள்ளார்  இது பர்மா தேசத்துக்கு புதிதல்ல அனால் பாரதவாசிகள் நாம், நம் பறந்து விரிந்த தேசத்தில் பர்மா என்பது ஒரு பகுதியாகவே அறிய பட்டது  ஐராவதம் என்ற நதியின் கரைகளிலும் பாகன் கோயில்களிலும் நம் கலாச்சாரத்தின் கால் சுவடுகள் இன்றும் தென்படுகின்றன  இந்த நோக்கத்தில் நாம் பர்மாவை பற்றி புரிந்துகொள்வதற்கான பதிவு தான் இது  மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்  நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    46 min
  2. 05/02/2021

    காங்கிரஸ் இயக்கமா? கட்சியா? சுதந்திரத்தின்போது அரசியல் நிலைப்பாடுகள் என்ன? | Freedom Movement & Politics of Independence

    ஜெய் சோமநாதா!  தொடர்ச்சியாக சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பும் அதன் பின்னணியில் நிகழ்ந்த  வரலாறும் கடந்த இரண்டு பதிவுகளாக பார்த்திருப்போம்   இன்றைய பதிவில் அதன் பின்னணியில் நடந்த அரசியலும் அரசியல்வாதிகளின்  நிலைப்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்க்கிறோம்   சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ் என்கிற இயக்கம் பூரண ஸ்வராஜ்யம்  என்ற கொள்கையை கொண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற போராடி  கொண்டிருந்தது   அனால் சுதந்திரத்திற்கு பிறகு அது அரசியல் கட்சியாக மாறியது   அந்த கால கட்டத்தில் உலக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன   இப்படி பட்ட சூழலில் சோமநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டது   அடுத்த பதிவில் வேறு சில சுவாரஸ்யமான தகவல்களுடன் சந்திக்கிறோம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    44 min
  3. 05/02/2021

    காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்களும் போலி வரலாற்றாசிரியர்களும் | Barbaric invaders & Whitewashing historians

    இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் முகங்கள் நம்மை முகம்சுளிக்க  வைத்தால் அதன் காரணம் நாம் படித்த வரலாற்றுப்பாடங்கள் தான்   ப்ரம்மாண்டமான கோயில்களை உருவாக்கிய சிவபக்தன் ராஜேந்திர சோழன் முகம்மது  கஜினி சோமநாதர் ஆலயத்தை தாக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தார்? ஏன் அவர்  பாரதத்தின் பொக்கிஷத்தை காக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பும் போலி  வரலாற்றாசிரியர்களும்   காட்டுமிராண்டித்தனமான செயல்களும் வெறிகொண்ட படையெடுப்புகளையும் நடத்திய  சுல்தான்கள் மற்றும் முகலாயர்களை பற்றி அதே வரலாற்றாசிரியர்கள் ஏன் பூசி  மொழுகுகிறார்கள்?  சரி, எல்லாம் போகட்டும் - ஜவாஹர்லால் நேரு சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பை  ஏன் புறக்கணித்தார்?  இக்கேள்விகளுக்கு எப்பவும்போல பதில்களை தெளிவாக விளக்கியுள்ளார் வர்த்தக  கொள்கை ஆய்வாளர் திரு S சந்திரசேகரன் அவர்கள்   அடுத்த பதிவில் சந்திப்போம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    50 min
  4. 05/02/2021

    உணர்வற்ற கம்யூனிஸமும் சீனாவின் "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" கொள்கையும் | One Child Policy & its emotionless ideology

    இன்றைய பதிவில் அதாவது இந்து மகா சமுத்திரம் ஒன்போதாவது நிகழிச்சியில்  சீனாவில் இருக்கும் உணர்வற்ற சித்தாந்தத்தில் உருவான "ஒரு குடும்பம் ஒரு  குழந்தை" கொள்கையை பற்றி புரிந்துகொள்வோம்   1949இல் மக்களின் எழுச்சிக்கு பிறகு கம்யூனிச அரசு சீனாவில் தொடங்குகிறது   மா சே துங் காலத்தில் ஜனத்தொகையை கூட்ட முயற்சிகள் இருந்தாலும், பல  கொள்கைகளின் தோல்விகளுக்கு பின்பு மார்க்கெட் பொருளாதாரத்திற்கு நகர்ந்த  சீனா, பொருட்களின் அடிப்படையில் மனது ரீதியான தாக்கங்களை மறுத்து "ஒரு  குடும்பம் ஒரு குழந்தை" கொள்கையை சர்வாதிகார முறையில்  செயல்படுத்துகிறார்கள்   இதன் விளைவுகள் என்ன? சமூக அளவில் இதன் பிரதிபலிப்புகள் எவ்வாறு  அமைந்துள்ளன? நமது பாரதத்தில் இது போல் கொள்கைகள் சாத்தியமா? இந்தியாவில்  அவசரகால சர்வாதிகாரத்தில் என்ன நடந்தது?  அனைத்தையும் தெளிவாக நம்மிடம் விளக்கியுள்ளார் டெல்லியிலிருந்து திரு S  சந்திரசேகரன் அவர்கள்   அடுத்த பதிவில் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களுடன் வரலாற்று  சான்றுகளுடனும் சந்திப்போம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    41 min
  5. 05/02/2021

    அடிமை வர்த்தகமும் அதன் மூல காரணங்களும் | Origins of Slavery & Slave Trade

    இன்று நாம் காலனித்துவ வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளியாக இருக்கும்  அடிமை வர்த்தகமும் அதன் மூலக்காரணங்களும் என்ன என்பதை மதிப்புக்குரிய திரு S  சந்திரசேகரன் அவர்களிடமிருந்து அறிந்து கொள்கிறோம்  அடிமை வர்த்தகம் உருவான சூழ்நிலைகள் என்ன?  அதில் மதத் தலைவர்களின் பங்கென்ன?   எதற்க்காக அடிமை வர்த்தகம் செய்தார்கள், யார் இதிலிருந்து பயன்பெற்றாகள்?  காலனித்துவ ஆதிக்கம் எவ்வளவு மக்களை தாக்கியது?  பல கேள்விகள் மிக சுவாரஸ்யமாக ஆதாரங்களுடன் விளக்கமாளித்துள்ளார்  டெல்லியிலிருந்து திரு S சந்திரசேகரன் அவர்கள்  இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த வாரமும் பார்க்க இருக்கிறோம், அதனால்  கண்டிப்பா subscribe பண்ணிக்கோங்க  நண்பர்களிடம் இந்த அறிய தகவல்களை share செய்யுங்கள்  உண்மைகளை இன்னும் உரக்க சொல்வோம், அடுத்த பதிவில்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    40 min

About

The history of Bharat, its cultural soft power and connected stories that span the Indian Ocean and beyond

To listen to explicit episodes, sign in.

Stay up to date with this show

Sign in or sign up to follow shows, save episodes and get the latest updates.

Select a country or region

Africa, Middle East, and India

Asia Pacific

Europe

Latin America and the Caribbean

The United States and Canada