The Political Pulse | Hello vikatan

தொகுதி தேர்வில் Vijay. மதுரையில் உடையும் சஸ்பென்ஸ்? | Elangovan Explains

அன்வர்ராஜா தொடர்ந்து, அடுத்த விக்கெட்டாக, திமுகவில் இணைந்த மைத்ரேயன்.

அவர் எதிர்பார்த்த தொகுதியை, எடப்பாடி தர மறுத்ததால் கட்சி மாறினார் என்கிறார்கள். அதேநேரம், 'ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்த ஒருவரை எப்படி திமுகவில் சேர்த்துக் கொண்டார் ஸ்டாலின்?' என திமுகவிலும் முணுமுணுப்புகள்.

இன்னொரு பக்கம், மதுரை மாநாட்டை வைத்து, சவுத்தில் விஜய் போடும் கணக்கு.

முக்கியமாக தெற்கின் 55 தொகுதிகள் பட்டியல் எடுத்து, எது தோதான தொகுதி என்ற அலசல் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் தேர்வு செய்து, அதில் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என்கிறார்கள் தவெகவினர்.