The Political Pulse | Hello vikatan

The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. 'DMK டார்கெட், BJP-க்கு பாடம்' Edapadi-யின் 15 நாள் டூர் Decode! | Elangovan Explains

    23 HR AGO

    'DMK டார்கெட், BJP-க்கு பாடம்' Edapadi-யின் 15 நாள் டூர் Decode! | Elangovan Explains

    'கோவை டு நாகை' என ஏறக்குறைய முதற்கட்ட அரசியல் பயணத்தை முடிக்கிறார் எடப்பாடி. இந்த 15 நாட்கள் பயணத்தை , 'வட்டார அரசியலை முன் வைப்பது, அணிகளாக, சமுதாய ரீதியாக கலந்துரையாடல், மாஜிக்களுக்கு கட்டளை' என மூன்று வகைகளாக பிரித்துள்ளார். அதேநேரம், இந்த பயணத்தில், 'பாஜக-விடம் பணிந்துவிட்டார் எடப்பாடி' என்றெல்லாம் திமுக விமர்சித்தாலும், எடப்பாடி போட்ட 'ஏழு கணக்கு' நிச்சயமாக கோட்டை கனவை நிறைவேற்றும் என்கிறார்கள் அதிமுக-வினர். அதிலொன்றே 'விஜய்க்கு தூண்டில் போட்டு இருக்கும் எடப்பாடி' என்கிறார்கள். வொர்க் அவுட் ஆகுமா அவரின் கணக்குகள்? இன்னொரு பக்கம் கேரளத்து ஃபிடல் காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் வி.எஸ் அச்சுதானந்தனின் '101 ஆண்டு வாழ்க்கை!'.

    21 min
  2. Stalin-க்கு சுற்றி சுற்றி சிக்கல், முறியடிக்குமா புது Agenda? பதறும் மந்திரிகள்! | Elangovan Explains

    15 JUL

    Stalin-க்கு சுற்றி சுற்றி சிக்கல், முறியடிக்குமா புது Agenda? பதறும் மந்திரிகள்! | Elangovan Explains

    அதிமுக-பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' & 'ஓரணியில் தமிழ்நாடு' என இரண்டையும் கையிலெடுத்த மு.க ஸ்டாலின். 'அரசாங்கம்-கட்சி' நேரடியாக மக்களை சந்தித்தால், வாக்குகள் கிடைக்கும் என கணக்கு. ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடுமளவுக்கு, உட்கட்சியில் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். இதை சரிசெய்ய களையெடுப்பு அரசியல் கைகொடுக்கும் என நம்புகிறார். அதற்கேற்ப தஞ்சாவூர் மா.செ மற்றும் எம்.பி கல்யாண சுந்தரம் கட்சி பதவியை நீக்கி, அங்கே கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை பொறுப்பாளராய் நியமித்திருக்கிறார் மு.க ஸ்டாலின். ஏன் கல்யாணசுந்தரம் பதவி பறிபோனது? எப்படி அன்பழகனுக்கு யோகம் அடித்தது? இன்னொரு பக்கம், வளமான துறையில் 'தியாகி டீம்' கேட்கும் '6% கமிஷன்'. இதனால் கதறும் மன்றத்தினர். அடுத்து 'பாஜக-வை ரிஜெக்ட் செய்வோம். விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்போம்' என ஓபிஎஸ்-க்கு நெருக்கடி தரும் உட்கட்சி நிர்வாகிகள். அவரோ பாஜக பாசத்தில் இம்மியளவும் குறையாமல் இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் டீம், உடையும் அபாயத்தில் இருக்கிறது என்கிறார்கள் நிர்வாகிகள் இதை தடுக்குமா அவர்களுடைய செப்டம்பர் மாநாடு?

    22 min
  3. Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains

    14 JUL

    Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains

    'கூட்டணி ஆட்சி' என மறுபடியும் கொளுத்திப் போட்டுள்ளார் அமித் ஷா. இதை முறியடிக்க, ஆந்திரா ஜெகன் மோகன் Formula-வை கையிலெடுகிறார் எடப்பாடி. முக்கியமாக சமுதாய ரீதியிலாகவோ, மண்டல ரீதியிலாகவோ, 6 துணை முதலமைச்சர்களை நியமிக்கும் வாக்குறுதி என புது ரூட் எடுக்கிறார். இன்னொரு பக்கம், திமுக நெருக்கடியை பயன்படுத்தி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக. அந்தவகையில் 'பேக்கேஜ் 50' என்ற அஜெண்டாவை முன் வைத்துள்ளார் திருமா. இதில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தொகுதியும் உண்டு என்கிறார்கள் விசிக-வினர். இதை எப்படி சமாளிக்கப் போகிறார் மு.க ஸ்டாலின்?

    21 min
  4. TRB Raja-வை சுற்றி DMK வார்? Stalin-க்கு சிக்கல் தரும் தொகுதிகள்! | Elangovan Explains

    12 JUL

    TRB Raja-வை சுற்றி DMK வார்? Stalin-க்கு சிக்கல் தரும் தொகுதிகள்! | Elangovan Explains

    ' நூறு தொகுதிகளுக்கு மேல் வீக்காக உள்ளது' என மு.க ஸ்டாலினுக்கு வந்திருக்கும் ஷாக் ரிப்போர்ட். இதை சரி செய்ய ரோடுஷோ உள்ளிட்ட மக்கள் சந்திப்பை தீவிர ப்படுத்துகிறார் ஸ்டாலின் ஆனாலும் பல மாவட்டங்களில் வெடிக்கும் உட்கட்சி மோதல். சமீபத்தில் திருவாரூர் சென்ற போது வெளிப்படையாகவே தெரிந்த டிஆர்பி ராஜா டீம் Vs பூண்டி கலைவாணன் டீம் போஸ்டர் யுத்தம். இந்த சின்ன சின்ன பிரச்சனைகளையும் சரி செய்ய தனி டீம் அமைத்துள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக பலவீனங்களை தமக்கு பலமாக மாற்ற திட்டமிடுகிறார். முக்கியமாக சவுத் தமிழ்நாட்டில், ராஜேந்திர பாலாஜியை சுற்றி பல பிரச்சினைகள் உள்ளது. இதை சாதகமாக்க, கனிமொழியை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் ஸ்டாலின். திமுகவின் தென்னகத்து முகமாக மாறுகிறாரா கனிமொழி? இன்னொரு பக்கம் இதை சரி செய்ய 80 லட்சம் புதிய வாக்காளர்களை டார்கெட் செய்து சில அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது கட்சியினருக்கு. வொர்க் அவுட் ஆகுமா ஸ்டாலின் வகுத்துருக்கும் வெற்றிக்கான வியூகங்கள்?

    13 min
  5. 'Vaiko Vs Mallai Sathya' பின்னணியில் ஸ்கெட்ச் போட்டதே Stalin? உடையும் கூட்டணி? | Elangovan Explains

    10 JUL

    'Vaiko Vs Mallai Sathya' பின்னணியில் ஸ்கெட்ச் போட்டதே Stalin? உடையும் கூட்டணி? | Elangovan Explains

    மல்லை சத்யா கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என குற்றச்சாட்டும் வைகோ .வாரிசுக்காக என் மீது பழி சுமத்துவதா? என மறுக்கும் மல்லை சத்தியா. உடையும் அபாயத்தில் மதிமுக? இதற்கு பின்னணியில் திமுக லாபியோடு மல்லை சத்தியா செயல்படுகிறார் சமீபத்தில் மதிமுகவிலிருந்து திமுகவுக்கு சிலர் தாவினர். அதன் பின்னணியிலும் மல்லை சத்யாவே இருக்கிறார் மு.க ஸ்டாலினோடு நெருக்கமாக பயணித்து கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்பது துரை வைகோவின் டவுட் .அதே நேரத்தில் மதிமுக - திமுக கூட்டணி உடைந்தால் நல்லது என லாபக் கணக்கு போட்டு கவனிக்கும் அமித் ஷா.

    19 min
  6. 'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

    9 JUL

    'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

    'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கும் சௌமியாவை, வீழ்த்த, தனது மகள் ஸ்ரீகாந்திமதியை களம் இறக்கியுள்ளார் ராமதாஸ். அதுதான் செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடை ஏறியதற்கான பின்னணி என்கிறார்கள் தைலாபுரம் ஆதரவாளர்கள். தற்போது அப்பா- மகன் யுத்தம், மகளா... மருமகளா ..? என புதிய வடிவம் எடுத்து பரபரப்பை எகிறச் செய்கிறது. இதில் ராமதாஸுக்கு எதிராக கவனமாய் ஆட்டத்தை ஆடுங்கள் என அன்புமணிக்கு டெல்லியும் அட்வைஸ் செய்துள்ளது. பாமக-வில், நிமிடத்திற்கு நிமிடம் டிவிஸ்டுகள் அரங்கேறி வருகிறது. இன்னொரு பக்கம், அதிமுக சுற்றுப்பயணமா... இல்லை பாஜக பற்றை வெளிப்படுத்தும் பயணமா..? என எடப்பாடியை நோக்கி கேள்விகள் வருகிறது.அவருடைய சுற்றுப் பயணம் அப்டேட்ஸ்.

    19 min

About

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

More From Hello Vikatan

You Might Also Like

To listen to explicit episodes, sign in.

Stay up to date with this show

Sign in or sign up to follow shows, save episodes and get the latest updates.

Select a country or region

Africa, Middle East, and India

Asia Pacific

Europe

Latin America and the Caribbean

The United States and Canada