The Political Pulse | Hello vikatan

Modi தரும் நெருக்கடி, நிம்மதியிழக்கும் Edapadi? என்னதான் ஆச்சு அதிமுகவுக்கு? | Elangovan Explains

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் திரிசங்கு நிலையில் தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.கூட்டணி, ஆட்சியில் பங்கு என பாஜக தரும் நெருக்கடி, மாறாக விஜய்,சீமானுக்கு அழைப்பு கொடுப்பது என சில ஆட்டத்தை ஆடினாலும், பாஜகவின் கையே ஓங்கியுள்ளது.இதை சரிகட்டும் முயற்சியில் தான் பெரிய பலன் அமையாததால், பேச்சுகளும் முன்னுக்குப் பின் மாறி மாறி வருகிறது என்கிறார்கள்.கூட்டணியின் பெயரால் அதிமுகவை நெருக்கடிக்கு ஆளாக்கி, அந்த இடத்தை பிடிக்க திட்டமிடுகிறதா பாஜக? இன்னொரு பக்கம் 100 நாள் நடை பயணத்தை திருப்போரில் தொடங்கியிருக்கும் அன்புமணி. தடை போடத் துடிக்கும் ராமதாஸ். 'திருப்போரூர் டு தர்மபுரி' பயணம் வொர்க்அவுட் ஆகுமா?