The Political Pulse | Hello vikatan

'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains

'ஓ.பன்னீர்செல்வம் -நயினார் நாகேந்திரன்' இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இதற்கு பின்னணியில் எடப்பாடியின் ரோல் இருக்கிறது என்பது பன்னீர் டீமின் வலுவான சந்தேகம். முக்கியமாக தென் மாவட்டங்களில் அரசியல் ஆதிக்கம் செலுத்தவும், முக்குலத்தோர் முகமாக தன்னை முன்னிலைப்படுத்தவும், ஓபிஎஸ் இருந்தால் அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என அவரை கூட்டனியை விட்டு வெளியேற்றவும் காய் நகர்த்தினார் நயினார் என்பதும் சந்தேகங்கள். இன்னொரு பக்கம் இந்த மோதலை வைத்து அரசியல் ரீதியாக லாபக் கணக்கு போடும் அண்ணாமலை & மு.க ஸ்டாலின். முக்கியமாக இந்த மோதலை வைத்து தனது கூட்டணி கட்சிகளுக்கும் செக் வைத்துள்ள மு.க ஸ்டாலின் என்கிறார்கள்.