The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. 'MGR-VIJAYAKANTH' Vijay ரூட், இதையே விரும்பும் Amit shah! ஏன்? | Elangovan Explains

    9 HR AGO

    'MGR-VIJAYAKANTH' Vijay ரூட், இதையே விரும்பும் Amit shah! ஏன்? | Elangovan Explains

    அதிமுகவுக்கும் செக் வைத்து பேசியதால், தற்போது, தேமுதிக, பாமக என மூன்றாவது மெகா கூட்டணி அமைக்க விஜய் முயற்சி. '234' தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வாக்குகள் இருப்பதாலும், வட மாவட்டங்களில் பாமக செல்வாக்காக இருப்பதாலும், இந்த மூவ். முக்கியமாக, பாஜக கூட்டணியால் அதிர்ச்சியில் இருக்கும் அதிமுக உறுப்பினர்கள். அவர்களைக் கவர் செய்ய எம்ஜிஆர் உதவுவார் என விஜய் புது ரூட் எடுத்துள்ளார். வொர்க் அவுட் ஆகுமா? இன்னொரு பக்கம், தன்னுடைய பொதுச்செயலாளர் நாற்காலிக்கு மீண்டும் ஆபத்து. புலம்பும் எடப்பாடி. அடுத்து, 'திமுக மந்திரிகளின்' ஊழல் பட்டியலை கையில் எடுத்து களமாடுங்கள்' என பாஜக-வினருக்கு, அமித் ஷா உத்தரவு. பாமகவில் உருவாகி இருக்கும், அக்கா அரசியல். கடுப்பில் அன்புமணி.

    17 min
  2. Amit shah செக், ஆடிப்போன EPS? Vijay ரூட், ஹேப்பி BJP! | Elangovan Explains

    1 DAY AGO

    Amit shah செக், ஆடிப்போன EPS? Vijay ரூட், ஹேப்பி BJP! | Elangovan Explains

    மதுரை மாநாட்டில், அதிமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசியுள்ளார் விஜய். இதை உள்ளூர ரசித்த அமித் ஷா டீம். ஏனெனில் தவெக - அதிமுக கூட்டணி அமையவே கூடாது என உறுதியாக உள்ளது பாஜக. காரணம் தேசிய கட்சி Vs மாநிலக் கட்சி என களத்தை கட்டமைக்க விருப்பம். இங்கே அதிமுக Vs தவெக கூட்டணி அமைந்தால் தங்கள் கனவு கோட்டை நொறுங்கும் இதை தடுக்க நினைத்த நேரத்தில், எடப்பாடியை அட்டாக் செய்துள்ளார் விஜய். இன்னொரு பக்கம், நெல்லையில் பூத் கமிட்டி முகவர்கள் மீட்டிங்கில் பேசிள்ளார் அமித் ஷா. அங்கே, மீண்டும் 'கூட்டணி ஆட்சி' என்று பதிவு செய்துள்ளார். இது எடப்பாடிக்கு ஷாக்காக அமைந்துள்ளது.

    18 min
  3. 'நோ EPS' Vijay-ன் மதுரை மெசேஜ் இதுதான், சக்சஸா மதுரை மாநாடு? | Elangovan Explains

    2 DAYS AGO

    'நோ EPS' Vijay-ன் மதுரை மெசேஜ் இதுதான், சக்சஸா மதுரை மாநாடு? | Elangovan Explains

    விஜய்-இன் 'மதுரை மாநாடு' இதில் வழக்கம் போல குட்டி கதை, பஞ்சு வசனம் என அனைத்தும் இடம்பெற்றது. இம்முறை, கொஞ்சம் தூக்கலாகவே பாஜக அட்டாக்கும், அதைவிட அதிகமாகவே திமுக டார்கெட்டும் இருந்தது. மோடியை 'ஜி' என்றும், ஸ்டாலினை 'அங்கிள்' என்றும் Sarcasm செய்தார் விஜய். அதே நேரத்தில், மறைமுகமாக 'ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை' என எடப்பாடியையும் குறிப்பிட்டு பேசினார். மதுரையிலிருந்து கோட்டைக்கு புது ரூட் எடுத்திருக்கும் விஜய். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய எட்டு விவகாரங்களில் கோட்டை விட்டுருக்கும் எடப்பாடி. அதனால் நொறுங்குகிறதா அவருடைய கோட்டை கனவு?

    17 min
  4. குடைச்சல் தரும் CM-கள், செக் வைக்கும் Amit shah! 'பதவி பறிப்பு மசோதா' Plus & Minus!

    3 DAYS AGO

    குடைச்சல் தரும் CM-கள், செக் வைக்கும் Amit shah! 'பதவி பறிப்பு மசோதா' Plus & Minus!

    கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரதமரோ, முதலமைச்சரோ, மந்திரிகளோ, 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தால், 31 வது நாள் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற புதிய பதவி பறிப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளீர் அமித் ஷா. இது, மத்திய அரசாங்கம் தங்களுக்கு வேண்டாத முதலமைச்சர்களை, மந்திரிகளை இந்த சட்டத்தின் மூலமாக பதவியை பறித்து செக் வைக்கலாம் அல்லது இந்த சட்டத்தை காட்டி அவர்களை அடி பணிய வைக்கலாம் என்கிற பாதகங்கள் உள்ளது என எதிர்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இன்னொரு பக்கம், விஜயின் மதுரை மாநாடு. அதில் அவர் முன்பு உள்ள சவால்கள்.

    18 min
  5. ஆபத்தில் Modi-யின் PM பதவி? RSS-ன் 8 இடிகள்! | Elangovan Explains

    4 DAYS AGO

    ஆபத்தில் Modi-யின் PM பதவி? RSS-ன் 8 இடிகள்! | Elangovan Explains

    'ஆக 15' சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100 ஆண்டுகால தேச சேவை என்பது, பெருமைக்குரியது மற்றும் புகழ்பெற்றது' என பேசினார். 'RSS Vs Modi' என பனிப்போர் தீவிரமடைந்து வரும் வேளையில், ஏன் திடீரென பாராட்டுகிறார் மோடி? இதற்கு பின்னணியில் அவர் பிரதமர் பதவிக்கு மேல் தொங்கும் கத்தி என்கிறார்கள். அந்தவகையில் மோடிக்கு, RSS தரும் எட்டு குடைச்சல்கள். அதை எப்படி சமாளிக்கிறார்? முக்கியமாக ராகுல் & ஸ்டாலின் கைகோர்த்து கொடுக்கும் நெருக்கடிகள்...இதிலிருந்து மீள, என்ன திட்டம் வைத்துள்ளார் மோடி? இதில் முக்கியமாக, இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி. அவரை டிக் அடித்து, சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைத்த ராகுல். இதனால் கூடுதல் சிக்கலில் மோடி.

    19 min
  6. 'Vice President Candidate C.P Radhakrishnan' ஸ்டாலினுக்கு, மோடி செக்! | Elangovan Explains

    5 DAYS AGO

    'Vice President Candidate C.P Radhakrishnan' ஸ்டாலினுக்கு, மோடி செக்! | Elangovan Explains

    இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணியில், சி.பி இராதாகிருஷ்ணனை வேட்பாளராக்கியுள்ளனர். இவரை டிக் அடித்ததற்கு பின்னால் தமிழ்நாட்டுத் தலைவர், கொங்கு பெல்ட், ஸ்ட்ராங் ஆர்.எஸ்.எஸ்-காரர் என பல கணக்குகள் உள்ளன. முக்கியமாக அடுத்த ஆண்டு 2026 தேர்தலையொட்டி மு.க ஸ்டாலினுக்கு வைக்கப்படுகின்ற செக் என்றும் வர்ணிக்கின்றனர். இன்னொரு பக்கம், ராமதாஸ் - அன்புமணி போட்டி பொதுக்குழு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அன்புமணியின் தாயார் பிறந்தநாள் விழாவுக்கு, குடும்பத்தோடு அன்புமணி சென்று இருந்தார். அப்போது தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன? இதற்கிடையே 'அப்பா - மகனின் இந்த மோதலே நாடக மோதல் இதனால் வன்னியர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்' என கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர் காடுவெட்டி குருவின் குடும்பத்தினர்.

    18 min
  7. ஐ.பி-க்கு ED லாக், சுதாரிக்கும் STALIN, கவனத்தோடு EPS! | Elangovan Explains

    16 AUG

    ஐ.பி-க்கு ED லாக், சுதாரிக்கும் STALIN, கவனத்தோடு EPS! | Elangovan Explains

    சீனியர் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. முறைகேடான பண பரிவர்த்தனை உள்ளிட்ட காரணங்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களில் அடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பழனி போன்ற ஆன்மீக தலைநகரங்கள் குறி வைக்கிறது பாஜக. மேலும் திமுக பொருளாதார கட்டமைப்பை உடைக்க நினைக்கிறது டெல்லி அதையொட்டியே இந்த ரெய்டு என திமுக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு. இதன் பின்னணிகள். இன்னொரு பக்கம் 'மேற்கு லிருந்து அதிமுக தோல்வி தொடங்கும்' என சமீபத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதையொட்டி அதிமுக-வை பலவீனப்படுத்த ஏற்கனவே மேற்கு மாவட்டங்களில் இருந்து சிலர் திமுகவில் இணைந்தனர். செந்தில் பாலாஜி இந்த அசைன்மென்ட் செய்து முடித்தார். தற்போது கூடுதலாக தங்கமணி உள்ளிட்டவர்களை குறி வைக்கிறது திமுக. 'நான் வாழ்நாள் முழுக்க அதிமுக தான்' என தங்கமணி தெரிவித்தாலும் அதிருப்தியும் நிலவுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள திமுக நினைக்கிறது ஆனால் திமுக உள் முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி நினைக்கிறார் அதனால்தான் 'துரைமுருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை' என தொடர்ந்து பரப்புரை செய்கிறார். இப்படியாக மாறி மாறி பலகீனப்படுத்தும் அரசியல் ஓடுகிறது.

    18 min
  8. Vijay-ன் தொகுதி இதுதான், Kanimozhi-யுடன் போட்டியா? | Elangovan Explains

    15 AUG

    Vijay-ன் தொகுதி இதுதான், Kanimozhi-யுடன் போட்டியா? | Elangovan Explains

    ஒரு பக்கம் மதுரை மாநாட்டு வேலைகள் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம், விஜய் போட்டியிடப் போகும் சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. 'இளம் வாக்காளர்கள் தொட்டு கோஸ்டல் ஏரியா வரை' என ஐந்து அம்சங்களை அடிப்படையாக வைத்து விஜய்க்கான தொகுதிகளை தேர்வு செய்து வருகின்றனர் TVK-வின் டாப் லெவல் லீடர்ஸ். அந்த வகையில் 'திருவெற்றியூர் டு தூத்துக்குடி வரை' ஒரு பத்து தொகுதிகளை கையில் எடுத்து, இப்போதைக்கு அதில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர் . கனிமொழியுடன் போட்டியிட போகிறாரா விஜய்? எந்த எந்த தொகுதிகள், அங்குள்ள கள நிலவரம் என்ன? இன்னொரு பக்கம் விஜயின் சீக்ரெட் நகர்வுகளை புரிந்து கொண்டு, அதை தடுக்கும் வகையில், டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஷ் ஆகியோருக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.

    22 min

About

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

More From Hello Vikatan

You Might Also Like