The Political Pulse | Hello vikatan

'STALIN-OPS' புது கூட்டணி, பதற்றத்தில் BJP & EPS?! அரசியல் ட்விஸ்ட்! | Elangovan Explains

ஒரே நாளில் 'பிரேமலதா விஜயகாந்த் - மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ்-மு.க ஸ்டாலின், கவின் குடும்பம்- கனிமொழி' என மூன்று முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது. மாலையில் மீண்டும், மு.க ஸ்டாலினை அவர் வீட்டிலேயே சந்தித்துள்ளார் ஓபிஎஸ். ஒரு பக்கம் 'பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டார் ஜெயலலிதா' என கடம்பூர் ராஜு சர்ச்சை பேச்சு. அதற்கு 'அது வரலாற்று புரட்சி' என ஓபிஎஸ் கடும் அட்டாக். மேலும் 'பாஜக-வாகவே மாறிக் கொண்டிருக்கும் அதிமுக' என கடுமையான விமர்சனம். இன்னொரு பக்கம், 'பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என அதிரடி அறிவிப்பு வெளியிட்டு, அடுத்தடுத்து பாஜக அட்டாக் அரசியலை முன்வைத்து வருகிறார் ஓபிஎஸ்.

இப்படி பன்னீர், பிரேமலதா-வுடனான சந்திப்பை வைத்து, ' பாஜக எதிர்ப்பு' எனும் சாதக கணக்கு போட்டு வருகிறார் மு.க ஸ்டாலின்.

அதேநேரம் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஆறுதல் கொடுத்துள்ளார் கனிமொழி மற்றும் அமைச்சர்கள்.

'சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என நம்புகிறேன்' என்று உறுதி கொடுத்துள்ளார் கனிமொழி.