The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. ஐ.பி-க்கு ED லாக், சுதாரிக்கும் STALIN, கவனத்தோடு EPS! | Elangovan Explains

    1 DAY AGO

    ஐ.பி-க்கு ED லாக், சுதாரிக்கும் STALIN, கவனத்தோடு EPS! | Elangovan Explains

    சீனியர் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. முறைகேடான பண பரிவர்த்தனை உள்ளிட்ட காரணங்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களில் அடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பழனி போன்ற ஆன்மீக தலைநகரங்கள் குறி வைக்கிறது பாஜக. மேலும் திமுக பொருளாதார கட்டமைப்பை உடைக்க நினைக்கிறது டெல்லி அதையொட்டியே இந்த ரெய்டு என திமுக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு. இதன் பின்னணிகள். இன்னொரு பக்கம் 'மேற்கு லிருந்து அதிமுக தோல்வி தொடங்கும்' என சமீபத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதையொட்டி அதிமுக-வை பலவீனப்படுத்த ஏற்கனவே மேற்கு மாவட்டங்களில் இருந்து சிலர் திமுகவில் இணைந்தனர். செந்தில் பாலாஜி இந்த அசைன்மென்ட் செய்து முடித்தார். தற்போது கூடுதலாக தங்கமணி உள்ளிட்டவர்களை குறி வைக்கிறது திமுக. 'நான் வாழ்நாள் முழுக்க அதிமுக தான்' என தங்கமணி தெரிவித்தாலும் அதிருப்தியும் நிலவுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள திமுக நினைக்கிறது ஆனால் திமுக உள் முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி நினைக்கிறார் அதனால்தான் 'துரைமுருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை' என தொடர்ந்து பரப்புரை செய்கிறார். இப்படியாக மாறி மாறி பலகீனப்படுத்தும் அரசியல் ஓடுகிறது.

    18 min
  2. Vijay-ன் தொகுதி இதுதான், Kanimozhi-யுடன் போட்டியா? | Elangovan Explains

    2 DAYS AGO

    Vijay-ன் தொகுதி இதுதான், Kanimozhi-யுடன் போட்டியா? | Elangovan Explains

    ஒரு பக்கம் மதுரை மாநாட்டு வேலைகள் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம், விஜய் போட்டியிடப் போகும் சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. 'இளம் வாக்காளர்கள் தொட்டு கோஸ்டல் ஏரியா வரை' என ஐந்து அம்சங்களை அடிப்படையாக வைத்து விஜய்க்கான தொகுதிகளை தேர்வு செய்து வருகின்றனர் TVK-வின் டாப் லெவல் லீடர்ஸ். அந்த வகையில் 'திருவெற்றியூர் டு தூத்துக்குடி வரை' ஒரு பத்து தொகுதிகளை கையில் எடுத்து, இப்போதைக்கு அதில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர் . கனிமொழியுடன் போட்டியிட போகிறாரா விஜய்? எந்த எந்த தொகுதிகள், அங்குள்ள கள நிலவரம் என்ன? இன்னொரு பக்கம் விஜயின் சீக்ரெட் நகர்வுகளை புரிந்து கொண்டு, அதை தடுக்கும் வகையில், டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஷ் ஆகியோருக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.

    22 min
  3. Stalin-க்கு பூமராங்கான Sanitary Workers கைது, Modi-க்கு,Rahul செக்! | Elangovan Explains

    3 DAYS AGO

    Stalin-க்கு பூமராங்கான Sanitary Workers கைது, Modi-க்கு,Rahul செக்! | Elangovan Explains

    தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது என்கிறார்கள் தூய்மை பணியாளர்கள். அந்தநேரத்தில், காவல்துறையை கையில் வைத்திருக்கும் மு.க ஸ்டாலின், 'கூலி' படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றனர் எதிர்க்கட்சிகள். இன்னொரு பக்கம், பாஜகவை பதற வைக்கும் ராகுலின் ஐந்து அஸ்திரங்கள். முக்கியமாக 'வாக்கு திருட்டு' அதை வைத்து ஸ்டாலின் கொடுத்திருக்கும் அலர்ட். அதே நேரத்தில், ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் புது ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார் அமித் ஷா. '1967'-க்கு முன்புள்ள திட்டம். இது தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்யுமா?

    21 min
  4. தொகுதி தேர்வில் Vijay. மதுரையில் உடையும் சஸ்பென்ஸ்? | Elangovan Explains

    4 DAYS AGO

    தொகுதி தேர்வில் Vijay. மதுரையில் உடையும் சஸ்பென்ஸ்? | Elangovan Explains

    அன்வர்ராஜா தொடர்ந்து, அடுத்த விக்கெட்டாக, திமுகவில் இணைந்த மைத்ரேயன். அவர் எதிர்பார்த்த தொகுதியை, எடப்பாடி தர மறுத்ததால் கட்சி மாறினார் என்கிறார்கள். அதேநேரம், 'ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்த ஒருவரை எப்படி திமுகவில் சேர்த்துக் கொண்டார் ஸ்டாலின்?' என திமுகவிலும் முணுமுணுப்புகள். இன்னொரு பக்கம், மதுரை மாநாட்டை வைத்து, சவுத்தில் விஜய் போடும் கணக்கு. முக்கியமாக தெற்கின் 55 தொகுதிகள் பட்டியல் எடுத்து, எது தோதான தொகுதி என்ற அலசல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் தேர்வு செய்து, அதில் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என்கிறார்கள் தவெகவினர்.

    19 min
  5. அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைகிறதா PMK? Aug 09,10 திகில்! | Elangovan Explains

    7 AUG

    அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைகிறதா PMK? Aug 09,10 திகில்! | Elangovan Explains

    'கட்சியை அபகரிக்க பார்க்கிறார் அன்புமணி' என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராமதாஸ். முக்கியமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் 'வன்னியர் மகளிர் மாநாடு'. முன்னதாக ஆகஸ்ட் 09-ம் தேதி, அன்புமணி டீம் நடத்தும் போட்டிப் பொதுக்குழு. இதை எதிர்த்து வழக்கு போட்டு உள்ளார் ராமதாஸ். சுற்றுப்பயணத்தின் மூலம் தன்னுடைய பவரை காட்டுகிறார் அன்புமணி. பூம்புகார் மாநாட்டின் மூலம் தன்னுடைய மாஸை காட்ட விரும்புகிறார் ராமதாஸ். இதன் மூலம் தாங்கள் தான் அசல் பாமக என பறைசாற்ற இருவருமே தீவிரமாக செயல்படுகிறார்கள். இதில் 'மாநாடு சக்சஸாக நடந்து விடக்கூடாது என்று அதை தடுக்க டீம் போட்டு வேலை செய்கிறார் அன்புமணி' என குற்றம் சாட்டுகிறார்கள் ராமதாஸ் டீம். ஏறக்குறைய 'ஆகஸ்ட் 9, 10' இரண்டு தேதிகளில் 'யாருக்கு பாமக சொந்தம்?' என்பது நிரூபணம் ஆகிவிடும். 'இரட்டை மாங்கனியை பார்க்க தயாராகிவிடுங்கள்' என வேதனையை பகிர்ந்து கொள்கிறார்கள் பாமக தொண்டர்கள். இன்னொரு பக்கம் எஸ்.எஸ்.ஐ படுகொலை, என்கவுண்டர் என சட்டம் ஒழுங்கு பெரும் தலைவலியை, ஸ்டாலினுக்கு கொடுத்து வருகிறது . இதற்கிடையே ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சியினர் 'சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் வேண்டும்' என்று பாய்ன்ட்ஸ்களை பட்டியலிட்டுள்ளனர். இந்த சட்டத்தை நிறைவேற்றினால் என்ன சாதகம், பாதகம்? என தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது அறிவாலயத்தில்.

    18 min

About

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

More From Hello Vikatan

You Might Also Like