The Political Pulse | Hello vikatan

Vijay-ன் தொகுதி இதுதான், Kanimozhi-யுடன் போட்டியா? | Elangovan Explains

ஒரு பக்கம் மதுரை மாநாட்டு வேலைகள் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம், விஜய் போட்டியிடப் போகும் சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

'இளம் வாக்காளர்கள் தொட்டு கோஸ்டல் ஏரியா வரை' என ஐந்து அம்சங்களை அடிப்படையாக வைத்து விஜய்க்கான தொகுதிகளை தேர்வு செய்து வருகின்றனர் TVK-வின் டாப் லெவல் லீடர்ஸ்.

அந்த வகையில் 'திருவெற்றியூர் டு தூத்துக்குடி வரை' ஒரு பத்து தொகுதிகளை கையில் எடுத்து, இப்போதைக்கு அதில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர் . கனிமொழியுடன் போட்டியிட போகிறாரா விஜய்?

எந்த எந்த தொகுதிகள், அங்குள்ள கள நிலவரம் என்ன? இன்னொரு பக்கம் விஜயின் சீக்ரெட் நகர்வுகளை புரிந்து கொண்டு, அதை தடுக்கும் வகையில், டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஷ் ஆகியோருக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.