Thamirabarani to Thames

Thamirabarani to Thames
Thamirabarani to Thames Podcast

அமுதேனும் தமிழை!! அள்ளிப்பருகு!!

Episodes

  1. 19/08/2020

    சங்குதேவன் - புதுமைபித்தன்

    சங்குதேவனின் தர்மம்!!! கதாசிரியர் புதுமைபித்தன் எழுதிய கதைகளுள் ஒன்று, இலக்கிய இலக்கண நயத்துடன் சீர்திருத்த நடையில் தன் படைப்பை தருவதில் சிறப்புடையவர் புதுமைபித்தன். சங்குதேவன் இந்த சிறுகதையின் நாயகன்! கதை வயதான முதியவளிடன் இருந்து துவங்குகிறது. முருக்கு சுட்டு பிழைப்பு நடத்தி வரும் கிழவியாக முத்தாச்சி வருகிறாள்! அவளுக்கு திருமண வயதில் ஒரே ஒரு மகள்! ஏழ்மை வாட்டத்தை தாங்கி கொண்டு தன்னால் முடிந்த வரை முயன்று நல்ல திருமண வரன் தேடி நிச்சயிக்கிறாள்! திருமணத்திற்காக ஆசாரியிடம் தன் மகளுக்கென ஒரு சோடி பாம்படம் செய்ய செல்லியிருக்கிறாள்! மறுநாள் திருமணம் பாம்படம் வாங்கிச் செல்ல ஆசாரியிடம் வருகிறாள்! ஆசாரி சற்று தாமதபடுத்தவே பொழுது சாய்ந்துவிடுகிறது. அந்நாளில் வழிப்பறி,கொலை செய்யகூடியவனாக வருகிறான் சங்குதேவன்! இதில் ஆசிரியர் அதற்கான காரணத்தை அழுத்தமாக பதிவிடுகிறார் அதில் சங்குதேவனின் இத்தகைய நிலையை உணர்த்தும் வரிகளாக "அவன்தான் நம்ம சங்குத்தேவன். எல்லாம் இந்தக் கும்பினியான் வந்த பிறவுதான்! ஊர்க்காவலா எளவா? எல்லாம் தொலைந்து போயுட்டதே" என்பதன் மூலம் ஊர் மக்களை காக்கும் காவலர்களாக இருந்த இனத்தவர்கள் அந்நியர் ஆட்சியை எதிர்த்ததினால் உரிமைகள் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது. முத்தாச்சி பாம்படத்தை பெற்று கொண்டு காட்டு பாதை வழியாக செல்கிறாள்! அந்திசாய்ந்து இருட்ட ஆரம்பித்ததால் முத்தாச்சிக்கு சங்குதேவனை நினைத்து பயம் எழ, வழியில் ஒரு ஆணின் துணை கிடைக்கிறது! அந்த பாதசாரி முத்தாச்சியிடம், 'இந்த இருட்டில் எங்கே செல்கிறாய் கிழவி என வினவுகிறார்! முத்தாச்சி மலுப்பலாக ஓர் ஆளை பார்க்க செல்கிறேன் என்று அவரை பின்தொடர்கிறாள்! முத்தாச்சி அவரிடம் தான் வெள்ளாளர

    5 min
  2. 05/08/2020

    The First Indian Freedom Fighter.

    வயது 12 தான்... வாலிப வயதில் கற்க வேண்டிய மறப்போர், சிலம்பம், வாள்வீச்சு, யானை, குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற பல வீரக்கலைகளை கற்று தலைசிறந்து விளங்கினான் அச்சிறுவன். மதுரை அருகே புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கண்ணில் தென்படும் ஆடு, மாடு, மக்களை அடித்து கொன்று வந்தது. இதனால் மக்கள் தெருவில் நடமாட அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மக்களின் அச்சத்தை போக்க மன்னர் விஜயரங்க சொக்கநாதர், மக்களை அச்சுறுத்தும் புலியை கொன்று வீழ்த்துபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்த அச்சிறுவன் தெருக்களில் அச்சமின்றி நடமாடினான். ஒரு நாள் ஊருக்குள் புகுந்த புலியை தன் கையில் இருந்த ஆயுதத்தாலேயே கொன்று வீழ்த்தினான். அரசரும் அறிவித்தபடி பரிசு வழங்கி அச்சிறுவனை பாராட்டினார். துணிச்சலும், வீரமும் கொண்ட அச்சிறுவனே பின்னாளில் புலித்தேவன் என்று போற்றப்பட்டான். இந்திய விடுதலைக்கு தென்னகத்தில் இருந்து குரல் கொடுத்தவர்தான் இந்த புலித்தேவன். யார் இவர்? இவரது ஆரம்ப காலக்கதையை அறிவோமா?வீரத்திற்கு பெயர் பெற்ற திருநெல்வேலி சீமையில் நெற்கட்டும்செவலின் பாளையக்காரராக திகழ்ந்த சித்திரபுத்திர தேவர் - சிவஞான நாச்சியார் தம்பதியினருக்கு 1.9.1715ல் மகனாய் பிறந்தவர் புலித்தேவர். இவரது இயற்பெயர் காத்தப்ப பூலித்தேவர்.‘இளங்கன்று பயம் அறியாது’ என்பார்கள். இதற்கேற்ப இள வயது முதலே எதற்கும் அஞ்சாத புலித்தேவன் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளை வேட்டையாடி புலித்தோல், புலி நகங்களை அணிந்து கொண்டார். புலியை வேட்டையாடுவதில் கில்லாடியாக திகழ்ந்தாலேயே இவரை அனைவரும் ‘புலித்தேவன்’ என்று அழைத்தனர். இவர் தமிழ் இலக்கணம், இலக்கிய நூல்களை படித்து தாமே கவிதை எழுதும

    7 min

About

அமுதேனும் தமிழை!! அள்ளிப்பருகு!!

To listen to explicit episodes, sign in.

Stay up to date with this show

Sign in or sign up to follow shows, save episodes and get the latest updates.

Select a country or region

Africa, Middle East, and India

Asia Pacific

Europe

Latin America and the Caribbean

The United States and Canada