SBS Tamil - SBS தமிழ்

அயலகத் தமிழ் ஆசிரியரை உருவாக்கும் பேராசிரியர்

SRM பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுபவரும், தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பை இயக்கி வருபவருமான, பேராசிரியர் இல சுந்தரம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு சிட்னிக்கு வந்திருந்தபோது, அவரது செயற்பாடுகள் குறித்தும், மெல்பேர்ணில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை(Australian Tamil Academy)யுடன் இணைந்து அயலகத் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் கலந்துரையாடியிருந்தார். கலந்துரையாடலில் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் தலைவர் மு சுகுமாரனும் இணைந்து கொண்டார். அந்த கலந்துரையாடலின் மறு ஒலிபரப்பு இது.