பண்டைய தமிழர்கள் பனைஓலைகளை எழுத்து ஊடகமாகப் பயன்படுத்தினர். காலப்போக்கில் ஓலைச்சுவடிகள் பழுதடைந்த காரணத்தால், அவை படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அச்சு ஊடகங்கள் தோன்றியபிறகு, பழந்தமிழ் நூல்கள் அச்சாக வெளியிடப்பட்டன. இதற்காகப் பல பதிப்பாசிரியர்கள் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பாடவேறுபாடுகளைக் கவனித்து, மூலபாடங்களை நிலைநாட்டி, பதிப்புப் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஈழத்துப் பதிப்பாசிரியர்கள், பதிப்புத்துறையில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் பதிப்பித்த நூல்கள் இலக்கியம், இலக்கணம், இசை, சோதிடம், தருக்கம், வைத்தியம், வரலாறு போன்ற பலதுறைகளை உள்ளடக்கியவை. சுவடிகளின் குறியீடுகளை அடையாளம் காணும்திறன், பாட வேறுபாடுகளை அலசும் திறமை, மூலபாடத்தை உறுதிப்படுத்தும் திறமை போன்றவை இவர்களிடம் இருந்தன. இத்தகைய ஈழத்துப் பதிப்பாசிரியர்கள் பதிப்பித் நூல்களில் அவர்கள் கையாண்ட பதிப்பு உத்திகள், நெறிமுறைகள் குறித்து ஆராய்வதாக ‘ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்’ எனும் இத்தொடர் அமையவுள்ளது.
信息
- 节目
- 频率一周一更
- 发布时间2025年5月29日 UTC 11:46
- 长度17 分钟
- 分级儿童适宜