SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலியாவின் பணக்கார வீட்டு உரிமையாளர்களில் பலர் முதியோர் ஓய்வூதியமும் பெறுகிறார்களா?

ஆஸ்திரேலியாவில் அரசு வழங்கும் Age Pension பல முதியவர்களின் பிரதான வருமான ஆதாரமாக இருக்கிறது. ஆனால், செல்வம் படைத்த மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளைத் தவிர கணிசமான சொத்துக்களையும் கொண்டிருந்தாலும், ஓய்வூதியம் கோருகின்றனர் என்று சமூக சேவைகள் அமைச்சர் Tanya Plibersekற்கு அவருடைய துறை சார் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர் என்றும், அது குறித்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளதாகவும் Australian Financial Review செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.