25வது Garma (ஃகார்மா) திருவிழா, நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் இருந்து, விருந்தினர்களை Gumatj (குமாட்ஜ்) நாட்டில் ஒன்று திரட்டியது. ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ள தொலை தூரப் பகுதியான Arnhem Land - ஆர்ன்ஹம் தேசத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் நாள் – கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நான்கு நாள் கொண்டாட்டத்தில், ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பன்முக கலாச்சார சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று ஏராளமானோர் பூர்வீகக் குடிமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். Garma திருவிழாவில் நேரடியாகக் கலந்து கொண்ட, SBS Arabic தயாரிப்பாளர் Ramy Aly மற்றும் SBS Chinese தயாரிப்பாளர் Rena Li ஆகியோரின் உள்ளீடுகளுடன் Lera Shvets தயாரித்த விவரணத்தின் கூறுகளுடன், இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年8月7日 上午2:15 [UTC]
- 長度10 分鐘
- 年齡分級兒少適宜