SBS Tamil - SBS தமிழ்

உபயோகித்த துணிகளை சேகரித்து உலக சாதனை!

துபாயில் பயன்படுத்திய துணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Sanyo Daphneயுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி.