10 min

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம‪்‬ எழுநா

    • Society & Culture

சர்வதேச தராதரங்களின் படியான மதிப்பீட்டில் கனடா தேசம் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் வெற்றிகண்டுள்ளது என்றே கூறவேண்டும். கனடா உலகின் சமஷ்டிகளுள் பழமையானது. அது உறுதியான ஒரு சமஷ்டியாக நிலைத்துள்ளது.

பன்மைத்துவத்தின் பலபரிமாணங்களையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் வல்லமையுடைய சமஷ்டியாக அது விளங்குகிறது. கனடா பன்மைத் தேசியங்களின் நாடாக இருந்து வருவதோடு கியுபெக் பகுதியில் எழுந்த தனித்தேசியம் என்ற கோரிக்கை, பழங்குடிமக்களின் ‘முதலாவது தேசியங்கள்' (First Nations) என்ற கருத்து என்ற இரண்டையும் நேர்முறையாக அணுகியது. கனடாவில் பிரதேச உணர்வும் பிராந்திய அடையாளமும் மிகுதியாக உள்ளது. அது 'சமஷ்டியாக ஒன்று சேர்ந்த சமூகம்’(Federal Society) என்ற தன்மை உடையது.

புவியியல் இடப்பரப்பில் மிகவும் பெரியதான கனடாவில் (9,984,670 சதுர கிலோ மீட்டர்) சனத்தொகை அடர்த்தி மிகக் குறைவு. 2008 ஆம் ஆண்டில் ஒரு சதுர கி. மீட்டருக்கு 3.3 ஆட்கள் வதிந்தனர். அங்கு மொத்தம் 33.2 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். சனத்தொகை வளர்ச்சி 0.8 வீதமாக உள்ளது. ஐக்கிய அமெரிக்கா - கனடா எல்லையோரமாகவும், சில பெருநகரங்களிலும் கனடாவின் மக்கள் செறிந்து வாழ்கின்றனர்.

பழங்குடி மக்கள் கனடா சமூகத்தின் விளிம்புநிலை மக்களாக உள்ளதோடு, வறுமை, சுகாதாரம் போன்றவற்றில் மிக மோசமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேறுபல சமூகப் பிரச்சினைகளும் உள்ளன. தமக்கு ஏதாவது வகையிலான சுயாட்சிவேண்டும் என்றும், தமக்கு ஏனைய கனடிய மக்களைப் போன்று சமத்துவமாக வாழவும், பிறமக்களோடு நீதியான உறவுகளைப் பேணவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். 

ஏனைய மாநிலங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கனடாவின் மேற்குப் பகுதி மாநிலங்கள் தமது நலன்களை மத்தி

Top Podcasts In Society & Culture

Stuff You Should Know
iHeartPodcasts
Shawn Ryan Show
Shawn Ryan | Cumulus Podcast Network
This American Life
This American Life
The Ezra Klein Show
New York Times Opinion
Animal
The New York Times
Freakonomics Radio
Freakonomics Radio + Stitcher