SBS Tamil - SBS தமிழ்

கீழடியின் பண்டைய வசீகரம்: மறுபிறவி எடுத்த களிமண் காதணிகள்

களி மண்ணிலிருந்து கனவுகளை வடிவமைக்கிறார் நிதுஷா கிருஷன். எளிமையான மண்ணை அற்புதமான ஆபரண நகைகளாக மாற்றும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் பாரம்பரியம், படைப்பாற்றல் மற்றும் மீள் தன்மை ஆகியவற்றின் கலவையாகும். அவரது கைகள் ஆர்வம், பொறுமை மற்றும் அடிப்படையிலிருந்து அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்கும் அழகின் கதைகளைச் சொல்கின்றன. Kiki Collection என்ற நிறுவனத்தை உருவாக்கி, நிதுஷா கிருஷன் தனது படைப்புகளை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறார். போர்ச் சூழலில் இருந்து மீண்டெழுந்த ஒரு சமுதாயத்தின் அடையாளமாக இருக்கும் நிதுஷா கிருஷன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.