டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் செக்ஸ் தொழிலாளியுடன் உறவு கொள்வதில் எழும் சிக்கல் குறித்து அவர் விளக்குகிறார். தொடரின் எட்டாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Informations
- Émission
- Chaîne
- FréquenceTous les jours
- Publiée24 août 2025 à 22:00 UTC
- Durée12 min
- ClassificationTous publics