SBS Tamil - SBS தமிழ்

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பினாலும் வளர்த்தவர்களை மறக்க முடியுமா?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (Biomedical Research and Environmental Sciences) பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் டாக்டர் அந்தோனி ஜீவராஜன் அவர்கள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் தனது பணியை செய்து வருகிறார். தனது பணி குறித்தும் நாசா குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் 2016ஆம் ஆண்டில் Dr. Antony Jeevarajan உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.