TamilVaasi/தமிழ்வாசி

தண்ணீர் தேசம் (கவிஞர் வைரமுத்து)

கலைவண்ணன் பத்திரிகையாளன், அவனது காதலி தமிழ் ரோஜா. தண்ணீர் என்றால் கலைவண்ணனுக்கு விருப்பம். தமிழ் ரோஜா பள்ளியில் படிக்கும் போது படகில் இருந்து தண்ணீரில் விழுந்து உயிர் பிழைத்ததால், தண்ணீர் என்றாலே பயம். தண்ணீர் பயத்தைப் போக்க திட்டமிடாமல் தனது மீனவ நண்பர்களுடன் தமிழ் ரோஜாவைப் படகில் கடலுக்கு அழைத்துச் செல்கிறான் கலைவண்ணன். நடுக்கடலில் படகு பழுதாகி விட, சுற்றிலும் தண்ணீர், பிடிக்காத சூழல் என்று தமிழ் ரோஜாவுக்குச் சூழ்நிலை மோசமாக அமைந்து விட என்ன ஆகிறது என்பதே கதை.