SBS Tamil - SBS தமிழ்

தமிழ்ப்பெண் உருவாக்கிய பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் Fairvine

பல வயதான ஆஸ்திரேலிய பெண்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுடைய ஓய்வூதிய நிதியில் போதுமான பணம் இருப்பதில்லை. பலர் வறுமையில் வாழ்கிறார்கள், வேறு சிலர் வீடற்றவர்கள் ஆக்கப்படுகிறார்கள். அவர்களின் நிலையை மனதில் கொண்டு, Superannuation எனப்படும் ஓய்வூதிய நிதி நிறுவனம் ஒன்றை சங்கீதா வெங்கடேசன் ஆரம்பித்துள்ளார். சிட்னியைத் தளமாகக் கொண்டு இயங்கும் Fairvine என்ற நிறுவனம், குறிப்பாகப் பெண்களை (ஆனால் பிரத்தியேகமாக அல்ல) இலக்காகக் கொண்ட ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். நிதி மற்றும் ஓய்வூதியம் குறித்து பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவை என்றும், Fairvine பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பற்றியும் சங்கீதா வெங்கடேசனுடன் 2020ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு இது.