இலங்கையின் மலைநாட்டில் அடியெடுத்து வைக்கும் எவருக்குமே அப்பிரதேசத்தின் இயற்கை வனப்பினைக்கண்டு அதில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்காதிருக்க முடியாது.
இயற்கையின் இந்த எழில்கொஞ்சும் காட்சிகளிலிருந்து எமது பார்வையைச் சற்றுத்திருப்பி அங்கு தேயிலைச் செடிகளுக்கிடையே மழை, வெயில், பனி, காற்று எனப்பாராது வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் பக்கம் செலுத்துவோமாயின் ஏதோ ஒன்று எம்மை உலுக்குவதை உணரலாம்.
அங்குக் காணப்படும் இயற்கையின் செழுமைக்கு மாறான தோட்டத் தொழிலாளரின் வாடியவதனங்களும், ஒட்டியகன்னங்களும், இருளடைந்த கண்களும், இயற்கையான முதுமைநிலையினை அடையுமுன்னரே முதுமைக்கோலத்தை எட்டிவிடும் நடுத்தரவயது பெண்தொழிலாளர்களின் தோற்றமுமே எம்மை இந்நிலைக்கு இட்டுச் செல்வனவாகும்.
கடுமையான உழைப்பு, மந்தபோஷாக்கு, மோசமான காலநிலையின் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்குப் பொருத்தமான மேலாடைகளும் உரிய இருப்பிடவசதிகளும்; இல்லாமை, கடுமையான உழைப்பிற்கு மத்தியிலும் அத்தொழிலாளரிடையே நிலவும் வறுமை போன்றவற்றின் கோரவிளைவுகளே இவை என்பதை நாம் விளங்கிக்கொள்ள அதிகநேரம் செல்லாது.
தோட்டத் தொழிலாளரிடையே நிலவும் வறுமையின் தன்மையையும் அதற்குப் பங்களிக்கும் காரணிகளையும் தொட்டுக்காட்ட முயலுகின்றது இச்சிறு கட்டுரை.
#srilankantea #srilankatourism #lka #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #teagarden #tea #nature #ceylontea #srilankatea #upcountrypoliticians #teaplantation #TeaWorkers #teafactory #teaestates #teafarmer #teagarden #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள் #தேயிலைத்தோட்டம் #1000ரூபாசம்பளம்
Information
- Show
- FrequencyUpdated Weekly
- PublishedJune 19, 2022 at 6:03 AM UTC
- Length25 min
- Episode3
- RatingClean