SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. 8 小時前

    தமிழ்ப்பெண் உருவாக்கிய பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் Fairvine

    பல வயதான ஆஸ்திரேலிய பெண்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுடைய ஓய்வூதிய நிதியில் போதுமான பணம் இருப்பதில்லை. பலர் வறுமையில் வாழ்கிறார்கள், வேறு சிலர் வீடற்றவர்கள் ஆக்கப்படுகிறார்கள். அவர்களின் நிலையை மனதில் கொண்டு, Superannuation எனப்படும் ஓய்வூதிய நிதி நிறுவனம் ஒன்றை சங்கீதா வெங்கடேசன் ஆரம்பித்துள்ளார். சிட்னியைத் தளமாகக் கொண்டு இயங்கும் Fairvine என்ற நிறுவனம், குறிப்பாகப் பெண்களை (ஆனால் பிரத்தியேகமாக அல்ல) இலக்காகக் கொண்ட ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். நிதி மற்றும் ஓய்வூதியம் குறித்து பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவை என்றும், Fairvine பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பற்றியும் சங்கீதா வெங்கடேசனுடன் 2020ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு இது.

    13 分鐘
  2. 1 天前

    கீழடியின் பண்டைய வசீகரம்: மறுபிறவி எடுத்த களிமண் காதணிகள்

    களி மண்ணிலிருந்து கனவுகளை வடிவமைக்கிறார் நிதுஷா கிருஷன். எளிமையான மண்ணை அற்புதமான ஆபரண நகைகளாக மாற்றும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் பாரம்பரியம், படைப்பாற்றல் மற்றும் மீள் தன்மை ஆகியவற்றின் கலவையாகும். அவரது கைகள் ஆர்வம், பொறுமை மற்றும் அடிப்படையிலிருந்து அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்கும் அழகின் கதைகளைச் சொல்கின்றன. Kiki Collection என்ற நிறுவனத்தை உருவாக்கி, நிதுஷா கிருஷன் தனது படைப்புகளை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறார். போர்ச் சூழலில் இருந்து மீண்டெழுந்த ஒரு சமுதாயத்தின் அடையாளமாக இருக்கும் நிதுஷா கிருஷன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

    13 分鐘

評分與評論

4.1
(滿分 5 顆星)
7 則評分

簡介

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

「SBS Audio」的更多內容

你可能也會喜歡