SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. 10H AGO

    386 வயதான சென்னை

    மெட்ராஸ் அல்லது சென்னை என்ற நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறுவப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு சென்னை நகரம் 375 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததை சிறப்பிக்கும் வகையில் நடந்த சென்னை தின ஒருங்கிணைப்பாளர்கள் - வரலாற்றாசிரியர் S. முத்தையா, சமூக செய்தித்தாள்களை இயக்கி வரும் வின்சன்ட் டீ சொய்சா, மற்றும் ரேவதி ராம் அவர்களுடன், சென்னையில் நிகழ்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட நல்லி குப்புசாமி, தபால்துறை அதிகாரி S C பீமா ஆகியோர் மற்றும் சில சென்னைவாசிகள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குச் சொன்ன கருத்துகளுடன் நிகழ்ச்சி தயாரித்தவர் குலசேகரம் சஞ்சயன். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

    16 min
  2. 10H AGO

    உற்பத்தித் திறன் உச்சி மாநாட்டின் முதல் இரண்டு நாட்களில் என்ன நடந்தன?

    உயர்மட்ட பொருளாதார வல்லுனர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வாரம் கன்பராவில், ஆஸ்திரேலியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான தேசிய வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள கூடினார்கள். மற்றைய முன்னேறிய பொருளாதார நாடுகளைப் போலவே கடந்த பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து குறைந்த உற்பத்தித் திறன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வட்ட மேசை மாநாட்டில் யதார்த்தமான, ஆனால் நம்பிக்கையான எதிர்பார்ப்பு உள்ளது என்று கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers கூறியிருந்தார். அவர் எதிர்பார்த்தது அவருக்குக் கிடைத்ததா? மூன்று நாள் உச்சி மாநாட்டின் முதல் இரண்டு நாட்கள் குறித்த செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

    10 min

Ratings & Reviews

4.1
out of 5
7 Ratings

About

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More From SBS Audio

You Might Also Like