2021 ஆம் ஆண்டு கணிப்பின்படி வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 14,674 ஆகும். இது இலங்கையின் மொத்தப்படகுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமாகும். இப்பிரதேசத்தில் OFRP எனப்படும் வெளி இணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட கண்ணாடி நாரிழையிலான படகுகளே கூடுதலாக மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆரம்பகாலங்களில் மரபுவழியிலான கட்டு வள்ளங்கள் மரத்தினாலாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டன. அத்துடன் கைகளினால், கம்புகள், தண்டுகள் கொண்டும், பாய்களின் உதவியுடனும் அவை இயக்கப்பட்டன. ஆயினும் இப்போது பெரும்பாலும் கண்ணாடி நாரிழையினால் படகுகள் செய்யப்படா படகுகளே பயன்பாட்டில் உள்ளன. இவை வெளி இணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன. கட்டுமரங்கள், சிறிய தோணிகள் என்பவற்றின் பயன்பாடு மிக அரிதாகவே இன்று உள்ளன.
#fishing #fishinglife #fishing #coastalcommunity #coastalcommunities #Jaffna #fishingcommunity #fishingcommunities #northernsrilanka
Information
- Show
- FrequencyUpdated Weekly
- PublishedJuly 24, 2022 at 1:54 AM UTC
- Length3 min
- RatingClean