வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப
1806 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டம் உயர்சாதியினருக்குரிய மரியாதைகளை மரபுவழி வழமைகளின்படி வழங்கவேண்டும் என்று விதித்தது. (அருமைநாயகம் 1976). 1859 ஆம் ஆண்டில் குடியேற்ற நாட்டுச்செயலாளராக இருந்த எமர்சன் ரெனன்ட் சாதிமுறை கொடுமையானது எனக் கருத்துரைத்தாராயினும், சாதிமுறை மீது அரசாங்கம் நேரடியாகத் தலையிடுவது முறையன்று என்ற முடிவுக்கே வந்தார்.
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவமுடைய மாற்றம் ஒன்று, சாதிக்குழுக்கள் அரசுக்குச் சாதி அடிப்படையிலான நேரடி கடப்பாடுகளில் இருந்தும் சேவைகள் வழங்குவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டமையாகும். ஆயினும் அரசுக்கு அடுத்த இரண்டாம் நிலையில் மரபுவழி முறைமை தொடர்ந்தது. உதாரணமாக வடஇலங்கையில் கிராம மட்டத்தில் வேளாள உயர்சாதியினரைத் தலைமையாகக் கொண்ட சாதிமுறைமையும், சாதி உறவுகளும் தொடர்ந்தன.
மீன்பிடி, விவசாயம் என்ற இரண்டு மரபுவழித்தொழில்களோடு தொடர்புப்பட்டதாகச் சாதிமுறைமை வடபகுதியில் இயங்கியது. வடபகுதியின் தமிழ்ச் சமூகத்தில் நபர் ஒருவரின் சாதி அந்தஸ்து பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது.
Information
- Show
- FrequencyUpdated Weekly
- PublishedOctober 14, 2022 at 11:41 AM UTC
- Length7 min
- RatingClean