SBS Tamil - SBS தமிழ்

வரலாற்று ஆளுமை: ஆஸ்திரேலிய மம்பட்டியான் ‘நெட் கெல்லி’

ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத வரலாற்று அடையாளங்களுள் முக்கியமான பெயர் நெட் கெல்லி (Ned Kelly). போற்றவும் தூற்றவுமான இருவேறு மனோவியல்புகளை மக்களின் மத்தியில் விதைத்த ஒரு விநோத ஆளுமை. ஆஸ்திரேலியாவில் அன்றைய காலனியாதிக்கத்தின் அதிகாரத்திற்கு எதிராக, காவல்துறைக்குப் பெரும் சவாலாயிருந்து, காடுகளில் மறைந்துவாழ்ந்து, தந்திரமாய் சுற்றிவளைக்கப்பட்டு, இறுதியில் தூக்கிலடப்பட்டவர். அவர் பற்றிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.