SBS Tamil - SBS தமிழ்

‘வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள் கண்டிப்பாக வர வேண்டும்!’

தமிழர் வரலாற்று மற்றும் பண்பாட்டு எழுத்தாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய 'இந்து தேசியம்' என்ற நூல், PATCA-வின் செயலாளர் சுமதி விஜயகுமார் அவர்களால் 'Hindu Nationalism' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், தினகரன் செல்லையா அவர்கள் எழுதிய ‘சனாதனம் அறிவோம்' என்ற இரண்டு நூல்களும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) என்ற அமைப்பின் வாசகர் வட்டம், சிட்னியில் இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. அது குறித்த விபரங்களை நூல் ஆசிரியர்களுடனும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான தேவி பாலா அவர்களுடனும் நேர்கண்டு, எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.