SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. قبل ٢٨ دقيقة

    “நண்பனின்றி நாளென்ன? நட்பின்றி பொழுதென்ன?”

    ஐக்கிய நாடுகள் சபை, 2011 ஆம் ஆண்டில், ஜூலை 30ஆம் நாளை அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் நட்பின் முக்கியத்துவத்தை மதிக்கும் நாளாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. தனிநபர்கள், கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான நட்பு உத்வேகம் மற்றும் நல்லிணக்கத்தின் சக்திவாய்ந்த ஆதாரமாக செயல்பட முடியும் என்பதை ஐ.நா அங்கீகரிக்கிறது. தனிப்பட்ட பிணைப்புகள் மற்றும் சமூக உறவுகள் முதல் சர்வதேச உறவுகள் வரை, சர்வதேச நட்பு தினத்தில் நட்பின் உணர்வைக் கொண்டாடும் ஒரு தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

    ١٦ من الدقائق
  2. قبل يوم واحد

    சோலார் மின்சார வீடுகள் பேட்டரி நிறுவ பெடரல் அரசின் புதிய சலுகை என்ன?

    சோலார் மூலம் மின்சாரம் பெறும் வீடுகள் இதற்கான பேட்டரியையும் நிறுவ, பேட்டரிக்கு ஜூலை முதல் 30 சதவீத rebate – சலுகை வழங்குவதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் அவர்களின் பின்னணியைப் பொறுத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ١١ من الدقائق
  3. قبل يوم واحد

    பலரோடு தற்காலிக செக்ஸ் (Casual Sex) வைப்பதிலுள்ள சிக்கல் என்ன?

    டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் Casual Sex – தற்காலிகமாக ஒருவருடன் செக்ஸ் வைப்பதில் எழும் சிக்கல்கள் குறித்து அவர் விளக்குகிறார். தொடரின் ஏழாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ١٠ من الدقائق

التقييمات والمراجعات

٤٫١
من ٥
‫٧ من التقييمات‬

حول

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

المزيد من SBS Audio

قد يعجبك أيضًا