The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. சோர்வில் செங்கோட்டையன்...Amit shah கையில் ரிப்போர்ட்...டெல்லி பறக்கும் EPS!

    2天前

    சோர்வில் செங்கோட்டையன்...Amit shah கையில் ரிப்போர்ட்...டெல்லி பறக்கும் EPS!

    Vijay-ன் திருச்சி Public Meet. இதற்கு உடனடியாக மு.க ஸ்டாலின், அன்பில் என பல தரப்பிடமிருந்து எதிர்வினைகள் வந்திருப்பதை பாஸிட்டிவாக பார்க்கும் விஜய். DMK Vs TVK என களம் மாறுவதில் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் அப்செட்டில் அதிமுக. இதில், செங்கோட்டையனின் 10 நாள் கெடு முடிந்தது. எதிர்பார்த்த ஆதரவில்லை. சோர்ந்து போயிருக்கும் செங்கோட்டையன். இந்தநிலையில் 'நாங்கள் தொடர்பில் உள்ளோம். 'சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக சந்திக்க உள்ளோம்' என குண்டை போட்டுள்ளார் ஓபிஎஸ். அதேநேரத்தில் அவசர, அவசரமாக டெல்லி பறக்கும் எடப்பாடி. 3 டிமாண்ட்களை முன்வைப்பதாக தகவல். என்ன சொல்லப் போகிறார் அமித் ஷா?

    10 分钟
  2. 'Candidates List ரெடி'K.N Nehru-வின் கோட்டையில் Vijay வெடி, சீறும் Seeman! | Elangovan Explains

    5天前

    'Candidates List ரெடி'K.N Nehru-வின் கோட்டையில் Vijay வெடி, சீறும் Seeman! | Elangovan Explains

    'செப்டம்பர் 13'-ல், திருச்சியிலிருந்து மக்களை நேரடியாக சந்திக்கிறார் விஜய். தொகுதி பிரச்சனை, மாவட்ட மந்திரிகள் டார்கெட் என லிஸ்ட் ரெடி செய்து சம்பவம் செய்ய தயாராகி உள்ளார் விஜய் என்கிறார்கள். இன்னொரு பக்கம் '234' தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் லிஸ்டையும் ரெடி செய்துள்ளார் என்றும் தகவல்கள். இதை எப்படி பார்க்கிறது திமுக? விஜய்க்கு பதிலடி கொடுக்க, உதயநிதிக்கு ஒதுக்கப்படும் '40 தொகுதிகள்.' இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை குறி வைத்து புது வியூகம் வகுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள் உடன்பிறப்புகள். அதே நேரத்தில், விஜயை கடுமையாக அட்டாக் செய்யும் சீமான். இன்னொரு பக்கம் தண்ணீர், மரங்கள் மாநாடு என இயற்கை ரூட்டில் பயணிக்கிறார். அத்தோடு அவருக்கான தொகுதியும் ஏறக்குறைய தேர்வு செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள் நாதக-வினர். கோட்டையைப் பிடிக்க மூன்று பேரும், மூன்று ரூட்டில் வேகம் காட்டுகின்றனர். ரேசில் முந்துவது யார்?!

    21 分钟
  3. Anbumani-யை, Ramadoss நீக்கியதற்கு பின்னணியில் மகள்? வேலுமணி தரும் ஷாக்! | Elangovan Explains

    6天前

    Anbumani-யை, Ramadoss நீக்கியதற்கு பின்னணியில் மகள்? வேலுமணி தரும் ஷாக்! | Elangovan Explains

    அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ். தனக்கு கட்டுப்படாதது, இமேஜை உடைத்தது உள்ளிட்ட காரணங்கள். பொதுக்குழு விதிப்படி தான் தான் தலைவர். தன்னை நீக்க அதிகாரமில்லை என்பது அன்புமணி பதில். அன்புமணி இடத்தில் மகள் ஸ்ரீகாந்திமதியை நிறுத்த முடிவெடுத்த ராமதாஸ். இனி தேர்தல் ஆணையத்தின் கையில் தான் யாருக்கு பாமக ?என்பது உள்ளது. டெல்லி அனுகூலம் யாருக்கோ, அவருக்கே பாமக. இன்னொருபக்கம் வேலுமணி-க்கு பாசவலை விரிக்கும் பாஜக. வேலுமணியும் செங்கோட்டையனை வைத்து எடப்பாடி-க்கு எதிராக கேம் ஆடுகிறார் என்பது எடப்பாடி டீம் டவுட்.

    20 分钟
  4. செங்கோட்டையனை தொட்டதால் தலைவலியில் எடப்பாடி? கொங்கு தர்மயுத்தம்! | Elangovan Explains

    9月6日

    செங்கோட்டையனை தொட்டதால் தலைவலியில் எடப்பாடி? கொங்கு தர்மயுத்தம்! | Elangovan Explains

    செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி நீக்கியுள்ளார். இதற்கு பின்னணியில் , 'கட்சி என்றாலே தான் தான் முழுமையாக தன்னுடைய கண்ட்ரோலில் இருக்க வேண்டும்' என்கிற அரசியலும் உள்ளது. செங்கோட்டையன் இன்னும் முரண்டு பிடித்தால் அவரை கட்சியை விட்டு நீக்கவும் முடிவு எடுக்கலாம். அப்படி நடந்தால் சசிகலா,ஓபிஎஸ் என கரம் கோர்த்து, எடப்பாடிக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க தர்மயுத்தம் நடத்தவும் செங்கோட்டையன் திட்டம் என தகவல். இன்னொரு பக்கம் டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரனை டார்கெட் செய்து பேசியுள்ளார், எடப்பாடி, நயினார் கூட்டணியாக செயல்படுவதால், ஏனைய யாரும் ஒன்றிணையவிடாமல், அவர்கள் தடுத்து வருகின்றனர். இது தான் அவர்களுக்கு எதிராக திரள வைக்கிறது. அதிமுகவில் போக போக பல்வேறு அதிர்வுகள் காத்திருக்கின்றனர்.

    16 分钟
  5. செங்கோட்டையனின் கெடு, அவரை நீக்கும் முடிவில் EPS. ADMK Climax! | Elangovan Explains

    9月5日

    செங்கோட்டையனின் கெடு, அவரை நீக்கும் முடிவில் EPS. ADMK Climax! | Elangovan Explains

    ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றியைக் கொடுக்கும் அதற்கான முயற்சியை எடுங்கள் என எடப்பாடிக்கு பத்து நாள் கெடு விதித்துள்ளார் செங்கோட்டையன். உடனடியாக சசிகலா, ஓபிஎஸ் என பலரும் வரவேற்றுள்ளனர். எடப்பாடியை பொறுத்தவரை முதலமைச்சர் பதவியை விட கட்சி பதவியை முக்கியமானதாக பார்க்கிறார். எனவே செங்கோட்டையனின் கெடுவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. தேவைப்பட்டால் அவரை நீக்கவும் முடிவு எடுக்கலாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் எடப்பாடி முக்கியம் ஒருங்கிணைந்த அதிமுகவும் அவசியம் அதுவே பாஜகவுக்கு பலமானதாக மாறும் என பாஜக கருதுகிறது. ஒரு தர்ம சங்கட நிலையில் உள்ளது. நடக்கும் காட்சிகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி உள்ளது திமுக. செங்கோட்டையன் அங்கேயே இருந்து கலக குரல் எழுப்புவது தங்களுக்கு நல்லது என கணக்கிடுகிறது திமுக. செப்டம்பர் 15 என்ன ஆகப்போகிறது? கிளைமாக்ஸ் கட்டத்தில் அதிமுக.

    20 分钟

关于

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

更多来自“Hello Vikatan”的内容

你可能还喜欢